ஒரு கிலோ சிக்கன் 5 பைசா! பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று அறிவித்த கடைக்காரர் அதிர்ச்சி!

 

ஒரு கிலோ சிக்கன் 5 பைசா!  பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று அறிவித்த கடைக்காரர் அதிர்ச்சி!

ஐந்து பைசாவுக்கு திண்டுக்கல்லில் பிரியாணி கொடுத்து அசத்தியபோலவே, ஐந்து பைசாவுக்கு ஒரு கிலோ சிக்கன் இறைச்சி வழங்கி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார் மதுரை கடைக்காரர்.

பொதுவாக புதிய கடை திறப்பு விழாவின் போது ஒரு பிரியாணி வாங்கினால் ஒரு பிரியாணி இலவசம் என்று விளம்பரப்படுத்துவதான் வழக்கம். ஆனால், கடந்த ஆண்டு திண்டுக்கல் முஜிப் பிரியாணி கடைக்காரர் ஐந்து பைசாவுக்கு பிரியாணி என்று அறிவித்ததும் கூட்டம் அலைமோதியது.

ஒரு கிலோ சிக்கன் 5 பைசா!  பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று அறிவித்த கடைக்காரர் அதிர்ச்சி!

பழைய நாணயங்களின் பெருமையை இப்போதிருப்போரும் உணரவேண்டும் என்றுதான் இப்படி செய்ததாக தெரிவித்திருந்தார் முஜிப் பிரியாணி கடைக்காரர் ஷேக்முஜிபுர் ரஹ்மான்.

அவர் சிக்கன் பிரியானி கொடுத்தது போலவே, உசிலம்பட்டியில் நேற்று முன் தினம் தனது புதிய கடை திறப்பு விழாவிற்கு ஒரு கிலோ சிக்கன் ஐந்து பைசா என்று போஸ்டர் ஒட்டப்பட்டிருந்தது.

உசிலம்பட்டியில் 40 ஆண்டுகளுக்கு மேலாக இயங்கி வரும் ஆனந்தா பிராய்லர் கோழி கடையின் புதிய கிளை பேரையூர் சாலையில் நேற்று முன் தினம் தொடங்கப்பட்டது.

ஒரு கிலோ சிக்கன் 5 பைசா!  பழைய பைசா யாரிடமும் இருக்காது என்று அறிவித்த கடைக்காரர் அதிர்ச்சி!

உசிலம்பட்டி முழுவதும் ஒட்டப்பட்ட போஸ்டரால் மதுரை மாவட்டம் முழுவதிலும் பரபரப்பு நிலவியது. நூற்றுக்கணக்காணோர் ஐந்து பைசா நாணயத்துடன் வந்து சிக்கன் வாங்கிச்சென்றனர்.

பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியில் தான் இப்படி செய்ததாக தெரிவித்திருக்கிறார் கடைக்காரர்.

செல்லக்காசு ஆகிவிட்டதால் பழைய ஐந்து பைசா நாணயங்களை யாரும் பாதுகாப்பது இல்லை. ஒரு சிலரிடம்தான் இருக்கும் என்று அறிவித்ததாகவும், எதிர்பார்க்காத வகையில் ஏகப்பட்ட பேர் ஐந்து பைசா நாணயத்துடன் வந்துவிட்டதாகவும், ஆனால் அத்தனை பேருக்கும் சிக்கன் கறி கொடுத்து சமாளித்துவிட்டதாகவும் தெரிவித்திருக்கிறார்.

கிராமப்புறம் என்பதால் மக்கள் பழைய நாணயங்களை வீட்டில் வைத்திருக்கிறார்கள். இதுவே நகர்ப்புறங்களில் இத்தகைய நாணயங்கள் மக்களிடம் இருக்க வாய்ப்பில்லை என்றும் தெரிவித்திருக்கிறார்.