நீர்மூழ்கி கப்பல் மாயம்: 53 ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள்?

 

நீர்மூழ்கி கப்பல் மாயம்: 53 ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள்?

இந்தோனேஷியா பாலி தீவு அருகே அந்நாட்டு ராணுவத்திற்கு சொந்தமான நங்கல402 நீர்மூழ்கி கப்பல் நேற்று வழக்கம்போல் பயிற்சியில் ஈடுபட்டிருந்தது. பயிற்சியின்போது 53 ராணுவ வீரர்கள் இந்த கப்பலில் இருந்தனர்.

நீர்மூழ்கி கப்பல் மாயம்: 53 ராணுவ வீரர்கள் என்ன ஆனார்கள்?

பாலி தீவில் இருந்து 95 கி.மீ. தொலைவில் கடலில் சென்று கொண்டிருந்த இந்த நீர்மூழ்கி கப்பல், திடீரென்று கட்டுப்பாட்டு அறையுடன் தொடர்பை இழந்தது.

இதனால் நீர்மூழ்கி எப்படி மாயமானது? கப்பலின் கதி என்ன? அதில் இருந்த 53 ராணுவ வீரர்களின் கதி என்ன? என்கிற விபரம் தெரியாததால் பதற்றம் அதிகரிக்கிறது.

போர்க்கப்பல்கள் குவிக்கப்பட்டு மாயமான நீர்மூழ்கி கப்பலை தேடு பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. மீட்பு பணிக்காக நீர்மூழ்கி கப்பல்களை வைத்திருக்கும் ஆஸ்திரேலியே, சிங்கப்பூர் அரசிடமும் உதவி கேட்டிருக்கிறார் இந்தோனேஷி்யா ராணுவ தளபதி தஜ்ஜான்டோ.