52வது சர்வதேச திரைப்பட விழா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

 

52வது சர்வதேச திரைப்பட விழா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரைக்கும் சர்வதேச திரைப்பட விருது விழா நடைபெறுவது வழக்கம். கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த காரணத்தினால் கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற வேண்டிய இவ்விழா இவ்வாண்டின் தொடக்கத்தில் ஜனவரியில் நடைபெற்றது.

52வது சர்வதேச திரைப்பட விழா- அதிகாரப்பூர்வ அறிவிப்பு

இதனால் இந்த ஆண்டின் திரைப்பட விழா நவம்பரில் நடைபெறாமல் தள்ளிப்போகும் என்று சொல்லப்பட்டு வந்தது. ஆனால், வரும் நவம்பர் 20ம் தேதி தொடங்கி 28ம் தேதி வரைக்கும் 52வது சரவதேச திரைப்பட விழா நடைபெறும் என்று மத்திய அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

கோவாவில் நடைபெற இருக்கும் இந்த விழாவில் கலந்துகொள்ள விரும்பும் படங்கள், வருகின்ற ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்த 52வது சர்வதேச திரைப்பட விழாவில் இயக்குநர் சத்யஜித் ரேக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட இருக்கிறது. 180 நாடுகளில் இருந்து 250 திரைப்படங்கள் இந்த விழாவில் திரையிடப்படும் என்கிற எதிர்பார்ப்பு இருக்கிறது.