52 வயது டிரம்புக்கு 28 வயது மெலனியா மீது மலர்ந்த காதல்….. ரூ.11 கோடி மோதிரத்துடன் காதலை சொன்ன அமெரிக்க அதிபர்…

 

52 வயது டிரம்புக்கு 28 வயது மெலனியா மீது மலர்ந்த காதல்….. ரூ.11 கோடி மோதிரத்துடன் காதலை சொன்ன அமெரிக்க அதிபர்…

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது மனைவி மெலனியாவை காதலித்து திருமணம் செய்தவர். 20 ஆண்டுகளுக்கு முன்பே ரூ.11 கோடி மதிப்பிலான மோதிரத்துடன் டிரம்ப் தனது காதலை மெலனியாவிடம் வெளிப்படுத்தியதாக தகவல்.

அமெரிக்காவின் முதல் பெண்மணியான மெலனியா 1970ல் ஸ்லோவேனியாவில் பிறந்தவர். 16 வயதில் மாடலிங்கில் நுழைந்த மெலனியா, பல்வேறு ஏஜென்சிகள் மூலம் பாரிசில் மாடலிங் செய்து கொண்டு இருந்தார். பின் 1996ல் நியுயார்க்கில் காலடி வைத்த மெலனியா அங்கும் மாடலிங் செய்து கொண்டிருந்தார். தற்போது அமெரிக்க அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் அரசியலுக்கு வருவதற்கு முன் ரியல் எஸ்டேட் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்தார். 

டிரம்ப்-மெலனியா

1998ல் பேஷன் வார நிகழ்ச்சியில் ஒன்றில் 28 வயதான மெலனியாவை டிரம்ப் முதல் முறையாக சந்தித்தார். அப்போது டிரம்புக்கு வயது ரொம்ப அதிகமல்ல 52 தான். அதன்பிறகு டைம் சதுக்கத்தில் நடைபெற்ற பார்ட்டியில் அவர்கள் இருவரும் மீண்டும் சந்தித்தார்கள். தங்களது செல்போன் நம்பரை பரிமாறி கொண்டார்கள். பின் மெல்ல மெல்ல அவர்கள் இருவரும் காதலில் விழுந்தனர். 5 ஆண்டுகளாக காதல் கடலில் முத்து குளித்த டிரம்பும், மெலனியாவும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்தனர். 

பரோன் டிரம்ப், டிரம்ப், மெலனியா

டிரம்புக்கு ஏற்கனவே இரண்டு திருமணங்கள் நடந்து அவை விவகாரத்தில் முடிந்த கதை மெலனியாவுக்கு தெரியும். 2005ல் நல்லதொரு நாளில் டிரம்பின் கரத்தை பற்றினார் மெலனியா. ரூ.11 கோடி மதிப்பிலான மோதிரத்துடன் டிரம்ப் தனது காதலை மெலானியாவிடம் தெரிவித்தார் என்ற தகவலும் உண்டு. 2001ல் மெலானியா அமெரிக்காவில் கிரீன் கார்டு பெற்றார். டிரம்பை திருமணம் செய்து கொண்ட அதற்கு அடுத்த ஆண்டில் (2006) அமெரிக்க குடியுரிமையை பெற்றார். டிரம்ப்-மெலானியா தம்பதியினருக்கு பரோன் டிரம்ப் என்ற மகன் உள்ளார்.