எஸ்.பி.வேலுமணி மீது 500 கோடி ரூபாய் எல்.இ.டி. பல்ப் ஊழல் புகார்!

 

எஸ்.பி.வேலுமணி மீது 500 கோடி ரூபாய் எல்.இ.டி.  பல்ப் ஊழல் புகார்!

முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உள்ளிட்ட 8 அமைச்சர்கள் மீது லஞ்ச ஒழிப்புதுறையில் திமுக சார்பில் ஊழல் புகார் அளிக்கப்பட்டது. ஆனால், அப்புகாரின் மீது நடவடிக்கை இல்லை என்று சொல்லி, ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஸ்டாலிந்தலையிலான திமுக நிர்வாகிகள் கடந்த 22ம் தேதி அன்று 97 பக்கள் ஊழல் புகார் மனுவை வழங்கினர். ஆளுநர் நடவடிகை எடுக்கவில்லை என்றால் நீதிமன்றம் செல்லப்போவதாகவும் திமுக தெரிவித்திருக்கிறது.

எஸ்.பி.வேலுமணி மீது 500 கோடி ரூபாய் எல்.இ.டி.  பல்ப் ஊழல் புகார்!

8 அமைச்சர்களில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. பல்பு வாங்கியதில் ரூபாய் 500 கோடி ஊழல் செய்ததாக அப்புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது.

எஸ்.பி.வேலுமணி உறவினர்கள், நண்பர்கள், பினாமிகளால் தொடங்கப்பட்டுள்ள நிறுவனங்கள் கே.சி.பி. என் ஜினீயர்ஸ் பிரைவேட்லிமிடெட், பி.செந்தில்&கோ, வர்தன் இன்ஸ்ஃபிராஸ்ட்ரெக்சர், கன்ஸ்ரானிக்ஸ் இந்தியா, ஆலயம் ஃபவுண்டேஷன் பிரைவேட் லிமிடெட், கண்ட்ரோமால் கூட்ஸ் பிரைவேட் லிமிடெட், இன்விக்டா மெடிடெக் லிமிடெட் என்று அதில் கூறப்பட்டிருக்கிறது.

எஸ்.பி.வேலுமணி மீது 500 கோடி ரூபாய் எல்.இ.டி.  பல்ப் ஊழல் புகார்!

அமைச்சர் எஸ்.பி.வேலுமணி எல்.இ.டி. டெண்டரை உலகளாவிய அளவில் விட்டிருந்தால் பத்து மடங்கு குறைவான செலவில் இறுதி செய்யப்பட்டு, பொதுமக்களின் பணமும் சேமிக்கப்பட்டிருக்கும். ஆனால்,எல்.இ.டி. விளக்குகளுக்கு வானளாவிய விலையை நிர்ணயிக்குமாறு தனக்கு கீழ் பணிபுரியும் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததுடன், பினாமிகள் பங்கேற்பதற்கு வசதியாக டெண்டர் விதிமுறைகளை வகுக்கச் செய்திருக்கிறார் என்றூம், மவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்களிலுள்ள மாநில அளவிலான குழுவால் நியமிக்கப்பட்ட அதிகபட்ச விலைக்கு பழைய தெரு விளக்குகளை மாற்றி எல்.இ.டி. விளக்குகளை பொருத்துவதற்கான ஒப்பந்தங்களை வழங்கச் செய்துள்ளார் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி என்றும்,

எஸ்.பி.வேலுமணி மீது 500 கோடி ரூபாய் எல்.இ.டி.  பல்ப் ஊழல் புகார்!

எல்.இ.டி. விளக்குகளின் விலையினை நிர்ணயித்தல் மாவட்ட அளவிலானா டெண்டர்களுக்கு என விதிமுறைகள், டெண்டர்களை மாநில கமிட்டி மூலமாக உருவாக்குதல் , அவரது பினாமிகளுக்கு ஒப்பந்தங்களை வழங்குதல் மூலம் 500 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட அமைச்சர் காரணமாக இருந்துள்ளார் என்றும், மாநில அளவிலான கமிட்டியில் பணியாற்றும் எஸ்.பி.வேலுமணியின் அதிகாரிகளும் 3 நிதியாண்டுகளில் அரசுப்பணம் சுமார் 500கோடி ரூபாயினை மோசடி செய்துள்ளனர் என்றும், அரசுக்கு இழப்பு ஏற்பட காரணமாக இருந்துள்ளனர் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.