வளைகுடா நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு! உடல்கள் எங்கே?

 

வளைகுடா நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு! உடல்கள் எங்கே?

கடந்த மார்ச் 23ம் தேதி முதல் கொரோனா தொற்றுநோய் பிரச்சினை காரணமாக வெளிநாட்டு விமான போக்குவரத்து சேவைகள் முற்றிலுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் வெளிநாடுகளில் சிக்கி தவிக்கும் இந்தியர்கள் நாடு திரும்ப முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. அவர்களை மீட்க மத்திய அரசு வந்தே பாரத் திட்டத்தை தொடங்கி வைத்தது.

வளைகுடா நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனாவால் உயிரிழப்பு! உடல்கள் எங்கே?

இந்த திட்டத்தின் அடிப்படையில் நூற்றுக்கணக்கான இந்தியர்கள் துபாய், சிங்கப்பூர் உள்ளிட்ட நாடுகளில் இருந்து தொடர்ந்து மீட்கப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் வேலைக்காக வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் பணியாற்றும் ஏராளமான தொழிலாளர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. உறவினர்களை பிரிந்து பல்லாயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைக்கு அப்பால் உள்ள அவர்களை மீட்க முடியாமல் குடும்ப உறுப்பினர்கள் தவித்தனர்.

இந்நிலையில் வளைகுடா மற்றும் கிழக்கு ஆசிய நாடுகளில் 5000க்கும் மேற்பட்ட இந்தியர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாகவும், உயிரிழந்தவர்களில் 1,807 பேரின் உடல்கள் மட்டுமே இந்தியாவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.