பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபர்களுக்கு தலா 500 அபராதம்!கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம்! ஈரோட்டில் அதிரடி!

பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபர்களுக்கு தலா 500 அபராதம்!கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம்! ஈரோட்டில் அதிரடி!

கொரோனா தொற்று தடுப்பு நடவடிக்கையின் காரணமாக பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபர்களுக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபர்களுக்கு தலா 500 அபராதம்!கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம்! ஈரோட்டில் அதிரடி!

வேக வேகமாக பரவி வரும் கொரோனாவை கட்டுப்படுத்த ஈரோடு மாவட்டத்தில் முக கவசம் அணியாமல் வந்தால் 200 ரூபாய் அபராதம் விதிக்கப்படு வருகிறது. கடைகளில் சமூக இடைவெளி கடைப்பிடிக்காத அரசு அறிவித்த பாதுகாப்பு வழிமுறைகளை கடைபிடிக்க கடைக்காரர்களுக்கு 5000 அபராதம் விதிக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது. முதலில் மாநகராட்சி அலுவலர்கள் மட்டுமே அபராதம் வசூலித்து வந்தனர் தற்போது மாநகராட்சி பணியாளர்களுடன் சுகாதார பணியாளர்கள் வருவாய் துறையினர் போலீஸ் உயரதிகாரிகள் அபராதம் விதித்து வருகின்றனர்.கடந்த சில நாட்களாக மா நகர் பகுதி முழுவதும் முக கவசம் அணியாமல் வந்தவர்களுக்கு 200 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது.

பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபர்களுக்கு தலா 500 அபராதம்!கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம்! ஈரோட்டில் அதிரடி!

இந்நிலையில் மாநகரில் நேற்று பொது இடங்களில் எச்சில் துப்பிய தாக 4 நபர்களுக்கு தலா 500 அபராதம் முதன்முறையாக விதிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து இன்று பஸ் நிலையம் வ. உ.சி காய்கறி மார்க்கெட் நாச்சியப்பா வீதி உட்பட பகுதிகளில் பொது இடங்களில் எச்சில் துப்பிய மேலும் 8 பேருக்கு தலா 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது. இவ்வாறாக 12 நபர்களுக்கு 500 அபராதம் விதிக்கப்பட்டது.

பொது இடத்தில் எச்சில் துப்பிய 12 நபர்களுக்கு தலா 500 அபராதம்!கடைகளுக்கு 5 ஆயிரம் அபராதம்! ஈரோட்டில் அதிரடி!

இது குறித்து மாநகராட்சி அதிகாரிகளிடம் நாம் கேட்டபோது, ’’வைரஸ் தொற்று அதிகமாக பரவி வருகிறது.எனவே பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வரும்போது கண்டிப்பாக முக கவசம் அணிந்து வர வேண்டும் அதே போன்று சமூக இடைவெளியை முறையாக கடைபிடிக்க வேண்டும்.பொது இடங்களில் எச்சில் துப்பக்கூடாது போன்ற வழிமுறைகளை அரசு வகுத்துள்ளது. இதனை மக்கள் முறையாக கடைபிடிக்க வேண்டும். தற்போது மாநகர் பகுதியில் அபராதம் விதிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதைப்போன்று கடை வைத்திருப்பவர்கள் அரசு அறிவித்துள்ள பாதுகாப்பு வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும் இல்லை என்றால் 5000 அபராதம் விதிக்கப்படும்’’ என்கிறார்கள்.