500 நாட்கள் காப்பகம்.. தத்தெடுத்த ஆனந்தத்தில் கைகளை உயர்த்தி பராமரிப்பாளர்களுக்கு “நன்றி” சொல்லும் நாய் !

 

500 நாட்கள் காப்பகம்.. தத்தெடுத்த ஆனந்தத்தில் கைகளை உயர்த்தி பராமரிப்பாளர்களுக்கு “நன்றி” சொல்லும் நாய் !

நயாகரா எஸ்பிசிஏ (SPCA) என்னும் விலங்குங்கள் காப்பகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போனிடா என்னும் நாய் ஒன்று இருந்து வந்துள்ளது.

அமெரிக்காவின் நியூயார்க்கில் உள்ள நயாகரா எஸ்பிசிஏ (SPCA) என்னும் விலங்குங்கள் காப்பகத்தில் கிட்டத்தட்ட ஒன்றரை வருடங்களுக்கு மேலாக போனிடா என்னும் நாய் ஒன்று இருந்து வந்துள்ளது. கடந்த ஆண்டு கிறிஸ்துமஸ் போது  போனிடா அங்கே தான் இருந்தது. பல பேர் அதனை பார்த்துவிட்டு சென்றும் யாரும் தத்தெடுத்துக் கொள்ளவில்லை. அதனால், இந்த ஆண்டு கிறிஸ்துமஸ் போதும்  போனிடா இங்கேயே தான் இருக்கும் என்று அங்கு வேலை பார்த்த ஊழியர்கள் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால், கடந்த 12 ஆம் தேதியன்று  போனிடாவை ரே கின்ஸ் என்பவர் தத்தெடுத்துக் கொண்டார். 

ttn

போனிடாவை, அது தங்கியிருந்த இடத்தில் இருந்து தனது வீட்டிற்கு அழைத்துச் செல்ல ரே கின்ஸ் சென்றுள்ளார். அனைவரிடமும் பாசமாக பழகிய அந்த அனுப்பி நாயை அனுப்பி வைக்க அங்கு வேலை பார்த்தவர்கள் அனைவரும் வாசலில் சென்று நின்றுள்ளனர். அதனைக் கண்ட போனிடா, தனது  கைகளை  தூக்கி அங்கு வேலைபார்த்த நபர்களின் கைகள் மீது வைத்து ‘நன்றி’ தெரிவித்தது. இதனைக் கண்ட  பராமரிப்பாளர்கள் பேரானந்தத்தில் திகைத்து நின்றனர். 

ttn

இது குறித்து பேசிய நயாகரா எஸ்பிசிஏவின் ஒருங்கிணைப்பாளர் கிம்பர்லி லாரூசா, ” எங்கள் அனைவருக்கும் அந்த நாய் மிகவும் பிடிக்கும். இங்குள்ள எல்லாரிடமும் அது நன்றாக பழகிவிட்டது.போனிடாவுடன் இருந்த நாட்களை நாங்கள் இழக்கப் போகிறோம்” என்று உருக்கத்துடன் தெரிவித்தார்.

  

ttn

போனிடா அழைத்து சென்ற ரே கிங்ஸ், போனிடாவிற்காக ஒரு இன்ஸ்டாகிராம் பக்கத்தை ஆரம்பித்து, அந்த புதிய வீட்டில் எவ்வளவு ஆனந்தமாக போனிடா இருக்கிறது. அங்குள்ள பொம்மைகளுடன் சேர்ந்து போனிடா எப்படி தூங்குகிறது போன்ற அனைத்தையும் வீடியோவாக பதிவேற்றம் செய்கிறார். ஒன்றரை ஆண்டுகள் இருந்த இடத்தில் இருந்து செல்லும் போது அந்த நாய் அனைவருக்கும் தனது கைகளை தூக்கி நன்றி தெரிவித்த அந்த வீடியோ இணையதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.