50 லட்சம் – இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

50 லட்சம் – இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

கொரோனா பேரிடரில் உலக நாடுகள் பெரும்பாலானவை சிக்கித் தவிக்கின்றன. உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 3 கோடியே 33 லட்சத்து 7 ஆயிரத்து 363 பேர்.

50 லட்சம் – இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 46 லட்சத்து 38 ஆயிரத்து 480 நபர்கள். கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 10 லட்சத்து 2 ஆயிரத்து 401 பேர்.

இந்தியாவில் கொவிட்-19 தொற்றில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை முக்கிய மைல்கல்லான 50 லட்சத்தை (50,16,520) கடந்துள்ளது.

50 லட்சம் – இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

அதிக அளவிலான நோயாளிகள் தினமும் குணமடைந்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 74,893 நபர்கள் வைரஸ் தொற்றில் இருந்து மீண்டுள்ளனர்.

சமீபத்தில் தினமும் 90,000-க்கும் அதிகமானோர் நாட்டில் குணமடைந்து வந்தனர். கடந்த 11 நாட்களில் மட்டுமே 10 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர்.

50 லட்சம் – இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

சிகிச்சையில் இருப்பவர்களின் எண்ணிக்கையை விட குணமடைந்தோரின் எண்ணிக்கை 5 மடங்கு அதிகம் ஆகும். கடந்த ஒரு மாதத்தில் மட்டும் குணமடைபவர்களின் விகிதம் 100 சதவீதம் அதிகரித்துள்ளது.

தேசிய குணமடைதல் விகிதம் 82.58 சதவீதமாக அதிகரித்துள்ளது. தேசிய சராசரியை விட அதிக குணமடைதல்களை 15 மாநிலங்கள்/யூனியன் பிரதேசங்கள் கண்டு வருகின்றன.

50 லட்சம் – இந்தியாவில் கொரோனாவிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை

மகாராஷ்டிரா, கர்நாடகா, ஆந்திரப் பிரதேசம், உத்திரப் பிரதேசம், தமிழ்நாடு, தில்லி, கேரளா, ஒடிஷா, மேற்கு வங்கம் மற்றும் பஞ்சாப் ஆகிய 10 மாநிலங்கள் நாட்டின் மொத்த குணமடைதல்களில் 73 சதவீதத்துக்கு காரணாமாக உள்ளன.