பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

பயங்கரவாதத்தால் சிதறுண்ட ஆப்கானிஸ்தான் நாட்டிலிருந்து அமெரிக்கா தனது படைவீரர்களை திரும்பப்பெற்று வருகிறது. ஆகஸ்ட் மாதத்துக்குள் மொத்த படை வீரர்களின் பணியும் முடிவடைவதாக அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். இதனால் அந்நாட்டை பயங்கரவாத குழுவான தலிபான்கள் கைகளின் வசம் ஆப்கானிஸ்தான் மீண்டும் பிடிபட்டுள்ளது. அந்நாட்டு மக்களைப் பாதுகாக்க வேண்டிய மொத்த பொறுப்பும் அந்நாட்டு அரசின் ராணுவத்தின் கைகளிலேயே உள்ளது.

பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

ஆனால் அவர்களால் தலிபான்களை எதிர்க்க முடியவில்லை. முன்பு அமெரிக்க வீரர்கள் இருந்ததால் கூட்டு சேர்ந்து திடக்காத்திரமாக எதிர்த்தார்கள். தற்போது அதற்கு வழியில்லை. ஆப்கானிஸ்தானின் வடமேற்கு பகுதியிலுள்ள படாக்ஸ்கான், கந்தகார் மாகாணங்களில் உள்ள நகரங்களைக் கைப்பற்றியிருக்கும் தலிபான்கள், நாட்டின் 85% பகுதிகளைக் கைப்பற்றிவிட்டதாக சூளுரைத்துள்ளனர். இதனால் அங்குள்ள இந்திய அதிகாரிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.

பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

காபூலிலுள்ள இந்திய தூதரகம், கந்தகார், மசார்-இ-ஷெரீப்பிலுள்ள இணை தூதரகங்களில் பணியாற்றும் 50க்கும் மேற்பட்ட இந்திய அதிகாரிகளை அங்கிருந்து வெளியேற்றும் பணியில் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் ஈடுபட்டுள்ளதாக நம்பகத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் நகரில் அல்கொய்தா பயங்கரவாதிகள் இரட்டைக் கோபுரத்தைத் தகர்த்தனர். அவர்களுக்கு ஆப்கானிஸ்தானிலுள்ள தலிபான்கள் அடைக்கலம் கொடுத்தனர். இதனால் ஆத்திரமடைந்த அப்போதைய அமெரிக்க அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தலிபான்கள் பக்கம் திரும்பியது.

பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

இது மிக தவறான நடவடிக்கை என வல்லுநர்கள் எச்சரித்தனர். ஆனால் அதையெல்லாம் கேட்காமல் புஷ் ராட்சத பீரங்கிகளை இறக்கிவிட்டு வேடிக்கை பார்த்தார். ஆப்கானிஸ்தானில் களமிறங்கிய அமெரிக்க படை வீரர்களும் அந்நாட்டு படை வீரர்களும் இணைந்து தலிபான்களை எதிர்த்து மிகக் கடுமையாகப் போரிட்டனர். இதில் அமெரிக்க-ஆப்கான் படைகள் வெற்றிவாகை சூடியதாகவும், அமெரிக்க படைவீரர்களின் உதவியுடன் அங்கேஜனநாயகம் மலர்ந்ததாக கூறப்பட்டது.

பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

தற்போது அங்கே பயங்கரவாதம் குறைந்ததாகக் கூறி 20 ஆண்டு காலமாக நிலைநிறுத்திவைக்கப்பட்டிருந்த ராணுவ வீரர்களைத் திரும்பப் பெற்றுக்கொள்வதாக அதிபர் ஜோ பைடன் சமீபத்தில் அறிவித்தார். ஒபாமா அதிபராக இருந்த காலத்திலேயே கொஞ்சம் கொஞ்சமாக படைகள் பின்வாங்கப்பட்டன. அதே பாணியில் முற்றிலுமாக படைகளைப் பின்வாங்க பைடன் முடிவெடுத்துள்ளார்.

பின்வாங்கும் அமெரிக்க படைகள்… தலிபான் வசமாகும் ஆப்கான்… அவசரமாக இந்தியர்களை வெளியேற்றும் இந்தியா!

ஆப்கானிஸ்தானில் நிலவும் பிரச்சினைகளுக்கு ராணுவ நடவடிக்கை தீர்வு அல்ல என்று கூறிய அவர், இது ஒரு வெல்ல முடியாத போர் என்கிறார். ஆப்கானிஸ்தானைக் கட்டமைப்பது அந்நாட்டு மக்களின் வேலை; நாம் அதற்கு உதவ முடியுமே தவிர அங்கேயே இருக்க முடியாது என்றார். இன்னும் எத்தனை அமெரிக்க வீரர்களை நாம் பறிகொடுக்க போகிறோம். தங்களது குடும்பங்களை விட்டு பிரிந்து வாடும் வீரர்களுக்கு நாம் என்ன பதில் வைத்திருக்கிறோம் என உணர்ச்சிக்கரமாகப் பேசினார் பைடன்.