4 மாவட்டங்கள் தவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 50% பேருந்துகள் இயக்கம்!

 

4 மாவட்டங்கள் தவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 50% பேருந்துகள் இயக்கம்!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பால் 5 ஆம் கட்ட ஊரடங்கு புதிய தளர்வுகளுடன் அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஊரடங்கில் கொரோனா கட்டுப்பாட்டு பகுதிகளை தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் 50% பேருந்துகள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி இன்று தமிழகத்தின் பேருந்து சேவைகள் துவங்கியிருக்கின்றன. குறிப்பாக தமிழகம் மொத்தம் 8 மண்டலங்களாக பிரிக்கப்பட்டு அந்த 8 மண்டலங்களுக்கு உள்ளாகவே பேருந்துகள் இயக்கப்பட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஒரு மண்டலத்தில் இருந்து பேருந்து இன்னொரு மண்டலத்துக்கு செல்ல அனுமதி வழங்கப்படவில்லை.

4 மாவட்டங்கள் தவிர, தமிழகத்தின் அனைத்து பகுதிகளிலும் 50% பேருந்துகள் இயக்கம்!

பிரிக்கப்பட்ட மண்டலங்களில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்கள் 7 ஆவது மண்டலமாகவும் சென்னை 8 ஆவது மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த 7 மற்றும் 8 ஆவது மண்டலங்கள் தவிர மற்ற அனைத்து மண்டலங்களிலும் 50% பேருந்துகள் கொரோனா தடுப்பு நடவடிக்கையுடன் இயக்கப்பட்டு வருகின்றன. அதாவது, பேருந்தில் 60% இருக்கைகளில் மட்டுமே பயணிகள் அமர்ந்து பயணிக்க வேண்டும் என்றும் மாஸ்க் அணிவது கட்டாயம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதில் பேருந்து சேவையை பயன்படுத்தி மண்டலங்களுக்கு உள்ளாகவே பயணிப்பவர்களுக்கு இ-பாஸ் தேவை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.