12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 50 சிறைக் கைதிகள் தேர்ச்சி!

 

12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 50 சிறைக் கைதிகள் தேர்ச்சி!

கடந்த மார்ச் மாதம் நடைபெற்ற 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வின் முடிவுகள் இன்று காலை வெளியாகியது. http://tnresults.nic.in, http://dge1.tn.nic.in, http://dge2.tn.nic.in ஆகிய 3 இணையதளங்களில் தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. அதே போல, மாணவர்கள் அளித்த மொபைல் எண்ணுக்கும் தேர்வு முடிவுகள் எஸ்.எம்.எஸ் ஆக அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்வில் 97.12% தேர்ச்சியுடன் திருப்பூர் மாவட்டம் முதலிடத்தையும் 96.99% தேர்ச்சியுடன் ஈரோடு இரண்டாம் இடத்தையும் 96.39% தேர்ச்சியுடன் கோவை மாவட்டம் மூன்றாம் இடத்தையும் பிடித்துள்ளது. இந்த பொதுத்தேர்வில் 2,120 பள்ளிகள் 100% தேர்ச்சியை பெற்றுள்ளன.

12 ஆம் வகுப்பு தேர்வெழுதிய 50 சிறைக் கைதிகள் தேர்ச்சி!

இந்த நிலையில் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 50 சிறைக் கைதிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். மொத்தமாக 62 கைதிகள் தேர்வு எழுதிய நிலையில், 50 கைதிகள் பாஸ் ஆக்கியுள்னர். இது மிகவும் வரவேற்கத்தக்கது.