Home லைப்ஸ்டைல் புதிய வேலையை ஏற்கும்முன் செக் பண்ண வேண்டிய 5 விஷயங்கள்

புதிய வேலையை ஏற்கும்முன் செக் பண்ண வேண்டிய 5 விஷயங்கள்

கொரோனா பேரிடரால் இந்த உலகில் கோடிக்கணக்கானவர்கள் வேலை இழந்துவிட்டனர் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. நம் வீட்டில், நம் நண்பர்கள் என வேலை இழந்தைம் ஒருவரையாவது  உங்களுக்குத் தெரிந்திருக்கக் கூடும். ஒருவேளை நீங்களே வேலை இழப்புக்கு உள்ளாகியிருக்கலாம்.

வேலை இழப்பு என்பதெல்லாம் தற்காலிகமே என்று எண்ணத்தை முதலில் விதைத்துக்கொள்ளுங்கள். ஏனெனில், வேலை செய்ய ஆள்கள் இல்லாது இந்த உலகம் இயல்பாக இயங்காது. எனவே, கொரோனா கெடுபிடிகள் தளர்ந்ததும் பல வேலைக்கான ஆபர் நிச்சயம் வரும். கவலை வேண்டாம்.

நீங்கள் எதிர்பார்த்ததுபோலவே ஒரு வேலைக்கான இண்டர்வியூக்குச் சென்று வந்துவிட்டீர்கள். மிகச் சிறப்பாக இண்டர்வியூவை எதிர்கொண்டதால் வேலைக்கான ஆபர் லெட்டரும் வந்துவிட்டது. நல்ல விஷயம்தான். ஆனால், புதிய வேலை ஏற்று, பணியில் சேரும் முன் இந்த 5 விஷயங்களைச் செக் பண்ண மறக்க வேண்டாம்.

ஒன்று: நீங்கள் இதுவரை பார்த்த வேலைக்கு கிடைத்த சம்பளத்தைவிட அதிகமாக இருக்கிறதா அல்லது இப்போது பார்க்கப் போகும் வேலைக்கு ஏற்ற சம்பளம் நிர்ணயிக்கப்பட்டிருக்கிறதா என்பதை முதலில் செக் பண்ணுங்கள்.

ஏனெனில், ஊதிய உயர்வுகள் குறித்து கொடுக்கப்படும் நம்பிக்கைகள் எல்லாமே இப்போதைக்கு வெறும் சொற்கள்தான். கொடுக்கப்படும் சம்பளமே கவனிக்கத்தக்கது.

இரண்டு: உங்களின் எதிர்கால இலக்குகளுக்கு இந்த வேலை எந்த வகையில் உதவும் என்பதைப் பாருங்கள். ஏனெனில், சினிமா தொடர்பான இலக்கை மனதில் வைத்துக்கொண்டு அதற்கு துளியும் சம்பந்தமே இல்லாத வேலை ஒன்றில் பணியாற்றுவது சாத்தியமே இல்லை.

ஏனெனில், மனம் ஒன்ற அந்த வேலையில் இணைய முடியாது. அதனால், முழு ஈடுபாட்டைக் காட்ட முடியாது. நல்ல பெயரையும் பெற முடியாது. பதவி உயர்வுகள், ஊதிய உயர்வுகளை நினைத்தும் பார்க்க முடியாது. அதைவிடவும் முக்கியம் உங்கள் வாழ்க்கை இலக்குக்காக உழைக்கும் நேரத்தை வேறொன்றுக்காக செலவழித்துக் கழித்துக்கொண்டிருப்பீர்கள்.

மூன்று: பணியில் சேர அழைப்பு தரும் நிறுவனத்தின் விதிகளை செக் பண்ணுங்கள். சில நிறுவனங்கள் தொழிலாளர்களை அங்குள்ள ஒரு கருவியைப் பார்ப்பதைப் போலவே கருதும். வார விடுப்பு, வேலை நேரம் நிர்ணயம் இவற்றில் கருணையே இல்லாமல் இருக்கும்.

கருணை இல்லாவிட்டாலும் பரவாயில்லை. பணியாளர் விதிமுறைகளுக்கு எதிராகவும் இருக்கக்கூடும். அதனால், அப்படியான கெடுபிடி நிறுவனங்களில் சேர்ந்துவிட்டு பின் வருந்துவதில் அர்த்தமில்லை. எனவே வேலையில் சேர்வதற்கு முன் கவனிப்பதே சரியானது.

நான்கு: உங்களை வளர்த்துக்கொள்ள அந்நிறுவனமோ அந்த வேலையோ உதவுமா? ஆம் இதுவும் முக்கியம். நீங்கள் செய்யும் வேலையினால் அந்த நிறுவனம் பொருளீட்டிக்கொள்ளும்; வளர்ந்துகொள்ளும்.

அதேபோல அங்கு பணிபுரியும் நீங்கள் சம்பளம் பெறுவதுடன், உங்களின் திறனை வளர்த்துக்கொள்ள வாய்ப்பிருக்கிறதா என்றும் பாருங்கள். இல்லையெனில், அந்த வேலையிலிருந்து வெளியே வரும்போது இப்போதைய திறனோடு மட்டுமே மற்றொரு வேலையைத் தேட வேண்டியிருக்கும்.

ஐந்து: நீங்கள் பணிபுரியும் நிறுவனம் சமூகத்தில் நல்ல பெயரோடு இருக்கிறதா என்பதையும் பாருங்கள். இப்படிச் சொல்வதற்கு காரணம், தவறான காரியங்களில் ஈடுபடும் ஒரு நிறுவனத்தில் நீங்கள் சிக்கிக்கொள்ளக்கூடாதே என்பதற்காகத்தான்.

ஏனெனில், மக்களுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ சிக்கலைத் தரும் நிறுவனம் எனில், அதன் பெயர் கெடும்போது உங்களுக்கும் சிக்கலே. அடுத்த வேலை தேடவும் பெரும் இடையூறாகவே அமைந்துவிடும்.

மாவட்ட செய்திகள்

Most Popular

மாத்திரை மருந்து இன்றி மனப் பதற்றத்தில் இருந்து விடுபட 8 வழிகள்!

வேலை, கடன் பிரச்னை, குடும்பம், உடல் நலம் என பல பிரச்னைகள் ஒவ்வொருவரையும் போட்டு வாட்டி வதைக்கிறது. பெரியவர்களுக்கு மட்டுமல்ல குழந்தைக்கும் கூட மனப் பதற்றம் பிரச்னை உள்ளது. நமக்கு...

ஆரோக்கியத்தைக் காக்க உதவும் ஐந்து உணவு பழக்கங்கள்!

ஆரோக்கிய வாழ்க்கைக்கு அடிப்படை நாம் எடுத்துக்கொள்ளும் உணவு. உடற்பயிற்சி உள்ளிட்டவற்றை ஒரு நாள், சில நாள், பல நாட்கள் கூட தவறவிடலாம். ஆனால், உணவு அப்படி இல்லை. நம்முடைய உடலின்...

தனித்து போட்டி என்றாலும் தேமுதிகவிற்கு பயமில்லை- விஜய பிரபாகரன்

தமிழக சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் ஒரு சில மாதங்களே எஞ்சியுள்ளன. அதற்கான பணிகள் தீவிர படுத்தப்பட்டிருக்கும் நிலையில், கட்சிகள் பிரச்சாரத்தில் களமிறங்கிவிட்டன. தேர்தலுக்கான கூட்டணி பற்றி கட்சிகளுக்குள்ளாக பேச்சுவார்த்தை நடக்கிறது....

வீட்டின் முன் நின்ற இருசக்கர வாகனம் திருட்டு… சிசிடிவி பதிவு வெளியீடு…

திருப்பத்தூர் வாணியம்பாடியில் வீட்டின் முன்பு நின்ற இருசக்கர வாகனத்தை பட்டப்பகலில் மர்மநபர்கள் திருடிச்சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திருப்பத்தூர் மாவட்டம்...
Do NOT follow this link or you will be banned from the site!