ஈரோட்டில் 5 பரிசோதனை நிலையங்கள்: தினமும் 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

 

ஈரோட்டில் 5 பரிசோதனை நிலையங்கள்: தினமும் 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

ஈரோடு மாநகராட்சியில் ஐந்து பரிசோதனை நிலையங்களிலும் தினமும் 450 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
ஈரோடு மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளது. தினமும் நூற்றுக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். குறிப்பாக ஈரோடு மாநகர் பகுதியை சேர்ந்தவர் தான் அதிக அளவில் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோட்டில் 5 பரிசோதனை நிலையங்கள்: தினமும் 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

இதையடுத்து மாவட்ட நிர்வாகம் மாநகராட்சியுடன் இணைந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. மாவட்டம் முழுவதும் தினமும் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட பிஸியா பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. ஜீரோ மிஷன் திட்டம் தொடங்கப்பட்டு நடமாடும் மருத்துவக் குழுக்கள் அமைக்கப்பட்டு மாநகர் பகுதியில் உள்ள 60 வார்டுகளிலும் ஒவ்வொரு ஏரியாவாக பிரித்து இலவச காய்ச்சல் சளி மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. இதில் காய்ச்சல் சளி போன்ற கொரோனா அறிகுறி உள்ளவர்கள் பி.சி.ஆர் பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் செல்கின்றனர். அதில் தொற்று உள்ளவர்கள் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஈரோட்டில் 5 பரிசோதனை நிலையங்கள்: தினமும் 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை

மேலும் ஈரோடு மாநகர் பகுதியில் காந்திஜி ரோட்டில் உள்ள மகப்பேறு மருத்துவமனை, சூரம்பட்டிவலசில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம், பெரிய அக்ரஹாரம் பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற பகுதிகளில் நிரந்தர பி.சி.ஆர் பரிசோதனை மையம் தொடங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. மேலும் பொதுமக்கள் வசதிக்காக கருங்கல்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையம், பெரியசேமூர் ஆரம்ப சுகாதார நிலையங்களில் கூடுதலாக இரண்டு பி.சி.ஆர் பரிசோதனை மையங்கள் தொடங்கப்பட்டு அங்கேயும் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இந்த ஐந்து பரிசோதனை நிலையங்களிலும் தினமும் 450 க்கும் மேற்பட்ட மக்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது. இதன் மூலம் வைரஸ் உள்ளவர்கள் கண்டறியப்பட்டு உடனுக்குடன் அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

ஈரோட்டில் 5 பரிசோதனை நிலையங்கள்: தினமும் 450 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை