‘’5% டெண்டர் கமிஷன் என்றாலே 2000 கோடி கிம்பளம் கிடைக்கும்’’

 

‘’5% டெண்டர் கமிஷன் என்றாலே 2000 கோடி கிம்பளம் கிடைக்கும்’’

திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்கள் ஆகிவிட்டதை அக்கட்சியினர் கொண்டாடி வரும் நிலையில், திமுக ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள்ளேயே 40 ஆயிரம் கோடி கடன் வாங்கியிருக்கிறது என்று அதிர வைக்கும் தகவல் சொல்லியிருக்கிறார் பாஜக மூத்த நிர்வாகி எச். ராஜா.

‘’5% டெண்டர் கமிஷன் என்றாலே 2000 கோடி கிம்பளம் கிடைக்கும்’’

கடந்த 10 ஆண்டுகால அதிமுக ஆட்சியில் வாங்கிய கடன்களை அண்மையில் திமுக அரசு வெள்ளை அறிக்கை வெளியிட்டது. இந்தநிலையில் ஆட்சிக்கு வந்து நூறு நாட்களுக்குள்ளேயே இத்தனை ஆயிரம் கோடியை திமுக வாங்கியிருக்கிறது என்று எச். ராஜா அதிர வைத்திருக்கிறார்.

கமுதி அடுத்த பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் நினைவிடத்தில் எச். ராஜா சுதந்திர தினத்தை முன்னிட்டு மரியாதை செய்த பின்னர், தேசியக் கொடியை ஏற்றி வைத்து அவர் பேசியபோது இந்த தகவலை சொல்லியிருக்கிறார்.

‘’5% டெண்டர் கமிஷன் என்றாலே 2000 கோடி கிம்பளம் கிடைக்கும்’’

இதைத்தொடர்ந்து, 100 நாளில் திமுக அரசு சுமார் 40000 கோடி ரூபாய் கடன் வாங்கியுள்ளது. இது எதற்கு வாங்கி எப்படிச் செலவிட்டார்கள் என மீடியாக்கள் கொஞ்சம் விவாதம் நடத்துங்கள் பார்க்கலாம்? என்கிறார் மாரிதாஸ்.

அவர் மேலும், இதில் 5% டெண்டர் கமிஷனாக , லஞ்சமாக என எடுத்தாலே கூட 2000 கோடி கிம்பளம் கிடைக்கும் என்று பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறார்.