திருப்பூர் மதுபானக் கூடங்களில் முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கல் – 6 பேர் கைது!

 

திருப்பூர் மதுபானக் கூடங்களில் முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கல் – 6 பேர் கைது!

திருப்பூர்

திருப்பூரில் மதுபான கூடங்களில் முறைகேடாக பதுக்கி வைத்த ரூ.5 லட்சம் மதிப்பிலான 3,500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக கடை உரிமையாளர்கள் உள்பட 6 பேரை கைது செய்தனர்.

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவல் காரணமாக, மாவட்ட நிர்வாகம் அத்தியாவசிய பொருட்கள் தவிர்த்து, டாஸ்மாக் உள்ளிட்ட மற்ற கடைகள் மாலை 5 மணி வரை மட்டும் செயல்பட அனுமதி வழங்கி உள்ளது. எனினும், திருப்பூர் நகரில் பல்வேறு இடங்களில் அனுமதிக்கப்பட்ட நேரத்தை கூடுதல் நேரம் மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

திருப்பூர் மதுபானக் கூடங்களில் முறைகேடாக மதுபாட்டில்கள் பதுக்கல் – 6 பேர் கைது!

அதன் பேரில், திருப்பூர் மாவட்ட டாஸ்மாக் மேலாளர் சௌந்தர பாண்டியன், கலால் உதவி ஆணையர் சுகுமார், அனுப்பர்பாளையம் போலீசார் பல்வேறு இடங்களில் சோதனையில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின்போது, திருப்பூர் காந்தி ரோடு பகுதியில் எதிரெதிரே உள்ள 2 மதுபானக் கூடங்கள் மற்றும் கூலிபாளையம் சாலை பகுதியில் உள்ள மதுபான கூடத்தில் ஆய்வில் பெட்டி, பெட்டியாக மதுபாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரிய வந்தது.

இதனை அடுத்து, 3 கடைகளிலும் இருந்து ரூ.5 லட்சம் மதிப்பிலான 3 ஆயிரத்து 500 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். மேலும், இதுதொடர்பாக மதுபானக்கூட உரிமையாளர்கள் மகாலிங்கம், தனபால் மற்றும் மதுபான கூடத்தில் பணிபுரிந்த ஊழியர்கள் 4 பேர் என மொத்தம் 6 பேர் மீது அனுப்பர் பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, கைதுசெய்தனர்.