ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

 

ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஜூலை 23 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 8 ஆம் தேதி வரை ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறவுள்ளது. தமிழகத்திலிருந்து 3 வீராங்கனைகள், 2 வீரர்கள் ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். அதன்படி, 4*400 மீட்டர் தொடர் ஒட்டப்பிரிவில் ரேவதி, தனலட்சுமி, சுபா, ஆரோக்கிய ராஜீவ், நாகநாதன் பாண்டி ஆகியோர் தேர்வாகியுள்ளனர்.

ஒலிம்பிக் செல்லும் தமிழ்நாடு வீரர்கள் 5 பேருக்கு தலா ரூ.5 லட்சம் ஊக்கத்தொகை- முதல்வர்

இந்நிலையில் ஒலிம்பிக்கில் இந்தியாவுக்காக விளையாட தகுதி பெற்ற தமிழ்நாட்டைச் சேர்ந்த 5 வீரர்களுக்கு தலா ரூ,5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். முன்னதாக, தமிழகத்தில் இருந்து ஒலிம்பிக் போட்டிகளுக்கு தேர்வான குமணன், வருண் எ.தக்கர், கே.சி.கணபதி, ஜி.சத்தியன், எ.சரத் கமல், சி.ஏ.பவானி தேவி, டி.மாரியப்பன் ஆகிய 7 பேருக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை வழங்கப்பட்டது. அதுமட்டுமின்றி, ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வென்றால் ரூ.3 கோடி, வெள்ளிப் பதக்கம் வென்றால் ரூ.2 கோடி, வெண்கலம் வென்றால் ரூ.1 கோடி பரிசு என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தார் என்பது குறிப்பிடதக்கது.