“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

 

“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

கொரோனா பாதிப்பு தமிழகத்தை புரட்டி போட்டு வருகிறது. பல மாதங்களாக பிறப்பிக்கப்பட்டிருக்கும் ஊரடங்கு மக்களின் வாழ்வாதாரத்தை பெருமளவில் பாதித்துள்ளது. எப்போது இந்த கொரோனா பாதிப்பு கட்டுக்குள் வந்து இயல்பு நிலை திரும்பும் என மக்கள் எதிர்பார்த்து காத்துக் கிடக்கின்றனர். தமிழகத்தில் பாதிப்பு குறைந்து வருவதாகவும் மக்கள் ஒத்துழைப்பு அளித்தால் விரைவில் இயல்பு நிலைக்கு திரும்ப முடியும் எனவும் முதல்வர் தெரிவித்து வருகிறார். இந்த கொரோனா பாதிப்பு ஒரு புறமிருக்க மறு புறம் பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. அந்த வகையில் ராமநாதபுரத்திலும் தவறுதலாக எலி மருந்தை சாப்பிட்ட சிறுமிகள் உயிருக்கு போராடி வரும் சம்பவம் நடந்துள்ளது.

“எலி மருந்தை சாப்பிட்ட 5 சிறுமிகள்” தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி; ராமநாதபுரத்தில் பரபரப்பு!

ராமநாதபுரம் சாயல்குடி அருகே வசித்து வரும் சிறுமிகள் 5 பேர் தின்பண்டம் என நினைத்து எலி மருந்தை சாப்ட்டுள்ளனர். சிறிது நேரம் கழித்து ஒவ்வொரு சிறுமியாக மயங்கி விழுந்ததால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர். அங்கு சிறுமிகளை பரிசோதித்ததில் அவர்கள் எலி மருந்து சாப்பிட்டது தெரிய வந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து சிறுமிகள் 5 பேரும் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.பெற்றோர்களின் அலட்சியத்தால் இது போன்ற சம்பவங்கள் தொடர்ந்து வருகிறது என்பது நினைவுகூரத்தக்கது.