மனிதக்கழிவுகளை அகற்ற மனிதனை பயன்படுத்தினால் 5 லட்சம் அபராதம்; 5 ஆண்டு சிறை!

 

மனிதக்கழிவுகளை அகற்ற மனிதனை பயன்படுத்தினால்  5 லட்சம் அபராதம்; 5 ஆண்டு சிறை!

மனிதக்கழிவுகளை மனிதனே அகற்றும் அவலத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குரல் கொடுத்த வந்த நிலையில், இப்போது தான் அதற்கு ஒரு விடிவுக்காலம் பிறந்திருக்கிறது.

இயந்திரங்கள் இல்லாமல் மனிதனே கழிவுகளை அகற்றுவதால் கடந்த ஐந்துஆண்டுகளில் 800 பேர் உயிரிழந்திருக்கிறார்கள். ஆகவே, மத்திய அரசு இதை கவனத்தில் கொண்டு இனி கழிவுகளை மனிதனே அகற்ற தடை போட்டிருக்கிறது.

மனிதக்கழிவுகளை அகற்ற மனிதனை பயன்படுத்தினால்  5 லட்சம் அபராதம்; 5 ஆண்டு சிறை!

நவம்பர் 19ம்தேதி அன்று உலக கழிவறைகள் தினம் அனுசரிக்கப்பட்டது. அன்றைய தினம் இதற்கான உத்தரவு பிறக்கப்பட்டுள்ளது. இதற்காக, ‘’சஃபைமித்ரா சுரக்‌ஷா சேலஞ்ச்’’ என்ற திட்டம் அறிமுகப்பட்டுள்ளது. கழிவுகளை மனிதன் அகற்றாமல், கருவிகளை கொண்டுதான் அகற்றப்பட வேண்டும் என்பதுதான் இத்திட்டத்தின் நோக்கம்.

இந்த திட்டத்தை முதல்கட்டமாக 243 நகரங்களில் அமல்படுத்தப்படுகிறது.
கருவிகள் வாங்குவதற்கு நிதியுதவி மத்திய நகர்ப்புற வளர்த்துறை சார்பில் வழங்கப்படும் என்றும், அதுவும் ஒப்பந்த தாரர்களுக்கோ, நகராட்சிகளுக்கோ நிதிஅளிக்கப்படாது. நேரடியாக தொழிலாளர்களிடமே கருவி வாங்கிக்கொள்ள நிதியுதவி வழங்கப்படும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஹர்தீப் சிங்புரி அறிவித்துள்ளார்.

அது மட்டுமல்லாமல், வரும் 31.4.2021க்குள் கழிவு நீர் அகற்றுவதில் முழுமையாக கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன என்பதை மாநில அரசுகள் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் தெரிவித்திருக்கிறார்.

மேலும், மனிதக்கழிவுகளை மனிதர்களே அகற்றும் வேலையை தடை செய்தல் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, மனிதக்கழிவுகளை அகற்ற மனிதர்களை பயன்படுத்தினால் 5 ஆண்டுகள் சிறை தண்டனை என்றும், 5 லட்சம் அபராதம் விதிக்கப்படும் என்றும் அதிரடியாக தெரிவித்திருக்கிறார்.