5 மொழிகளில் மிரட்ட வருகிறது சைலன்ஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

 

5 மொழிகளில் மிரட்ட வருகிறது சைலன்ஸ்: ரிலீஸ் தேதி அறிவிப்பு!

ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

இயக்குநர்  ஹேமந்த் மதுக்கர் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்  ‘சைலன்ஸ்’ . நடிகர் மாதவன் – அனுஷ்கா ஷெட்டி இணைந்து நடிக்க்கும் இப்படத்தை பீபிள்ஸ் மீடியா ஃபேக்டரி, கோனா பிலிம் கார்பரேஷன் இணைந்து தயாரித்துள்ளது.   தமிழ், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் என ஐந்து மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகியிருக்கும் இப்படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. 

ttn

இப்படம் அமெரிக்க வாழ் இந்தியர்களின் வாழ்வை மையமாகக் கொண்டிருக்கிறது. அங்கு நடைபெறும் ஒரு குற்ற சம்பவம், ஒவ்வொருவரின் வாழ்வையும் எப்படி புரட்டிப் போடுகிறது என்பதே படத்தின் கதைக்களமாகக் கொண்டு இப்படம் எடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வாய் பேசமுடியாத , காது கேளாத  பெண்ணாக  நடித்திருக்கிறார் அனுஷ்கா.

ttn

மேலும் அஞ்சலி, மைக்கேல் மேட்சன், ஷாலினி பாண்டே, சுப்பராஜூ, ஸ்ரீநிவாஸ் அவசரளா மற்றும் ஹன்டர் ஓ’ஹேரோ உள்ளிட்ட பலர் இதில் நடித்துள்ளார்கள். கருணாகரன் பாடல்களை எழுத, கோபி சுந்தர் இசையமைத்துள்ளார்.  திகில் படமாக உருவாகியுள்ள  ‘சைலன்ஸ்’ திரைப்படத்தை டிரைடன்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் உலகமெங்கும் வருகின்ற ஏப்ரல் மாதம் 2ம் தேதி வெளியிடவுள்ளது  குறிப்பிடத்தக்கது.