5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் Live Updates: தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு – நடிகர் ரஜினிகாந்த்

 

5 மாநில சட்டப்பேரவை தேர்தல் முடிவுகள் Live Updates: தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு – நடிகர் ரஜினிகாந்த்

நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன

டெல்லி: நாடு முழுவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை இன்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படவுள்ளன.

200 தொகுதிகளைக் கொண்ட ராஜஸ்தான், 40 தொகுதிகளை கொண்ட மிசோரம், 230 தொகுதிகளைக் கொண்ட மத்தியப்பிரதேசம், 90 தொகுதிகளைக் கொண்ட சத்தீஸ்கர், 119 தொகுதிகளை கொண்ட தெலங்கானா மாநில சட்டப்பேரவைகளுக்கு சில தினங்களுக்கு முன்னர் தேர்தல் நடைபெற்று முடிந்தது. அதில், மத்தியப்பிரதேச மாநிலத்தில் 75 சதவீத வாக்குகளும், சத்தீஸ்கரில் 76.35 சதவீத வாக்குகளும், மிசோரமில் 80 சதவீத வாக்குகளும், தெலங்கானாவில் 73.20 சதவீத வாக்குகளும், ராஜஸ்தான் மாநிலத்தில் 74.21 சதவீத வாக்குகளும் பதிவாகின.

இந்நிலையில் 5 மாநிலங்களிலும் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு முடிவுகள் இன்றைய தினமே அறிவிக்கப்படவுள்ளன. இதற்காக வாக்கு என்னும் மையங்களில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. குறிப்பாக மாவோயிஸ்ட் ஆதிக்கம் மிகுந்த சத்தீஸ்கர் மாநிலத்தின் பகுதிகளில் வாக்கு எண்ணும் மையங்களில் பல அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

நாடாளுமன்ற தேர்தலுக்கு முந்தைய மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த இந்த தேர்தல் முடிவுகள் நாடு முழுவதும் மிகவும் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது.

Welcome to our Live Blog 5 states assembly elections latest updates here: #AssemblyElectionResults2018 #ElectionResults2018 #RajasthanElections2018 #MadhyaPradeshElections2018 #MizoramElections2018 #TelanganaElections2018 #ChhattisgarhElections2018

இரவு 08.00: மத்திய பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் தலா 111 இடங்களில் சம அளவில் முன்னிலை வகிக்கிறது.

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் 27 இடங்களில் வெற்றிபெற்றும், 84 இடங்களில் முன்னிலையிலும் உள்ளது.

மாலை 06.00: புதிய ஆரம்பத்தின் முதல் அடையாளம். மக்கள் தீர்ப்பு இது – மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல் ட்வீட்

மாலை 05.39: பாஜக தனது செல்வாக்கை இழந்துள்ளதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன; 5 மாநில தேர்தல் முடிவுகள் பாஜக-வுக்கு பெரும் பின்னடைவு – நடிகர் ரஜினிகாந்த்

மாலை 05.25: மிசோரம் மாநிலத்தில் வாக்கு எண்ணிக்கை நிறைவு; மொத்தம் 40 தொகுதிகளில் எம்என்எஃப்-26, காங்கிரஸ்-5, பாஜக-01, மற்றவை-08 தொகுதிகளில் வெற்றி

மாலை 05.02: பிரதமரால் அதிகமாக உச்சரிக்கப்பட்ட #AccheDin இதோ இன்று  வந்துவிட்டது. இந்த நாள் இனிய நாள் – திமுக எம்.பி., கனிமொழி ட்வீட்

மாலை 04.22: மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் 114, பாஜக 105 தொகுதிகளில் முன்னிலை

மாலை 04.18: டெல்லியில் காங்கிரஸ் பிரமுகர்களுடன் காங். தலைவர் ராகுல் காந்தி 5 மணிக்கு ஆலோசனை; வெற்றி பெற்ற மாநிலங்களில் ஆட்சி அமைப்பது குறித்தும், தெலங்கானா, மிசோரம் மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து ஆய்வு நடத்தவும் திட்டம்

மாலை 04.15: ராஜஸ்தான், சத்தீஸ்கரில் காங்கிரஸ் ஆட்சி அமைப்பது உறுதியானது. தெலங்கானாவில் நான்கில் மூன்று பங்கு இடத்தை கைப்பற்றியது டி.ஆர்.எஸ்., மத்தியப்பிரதேசத்தில் பாஜக, காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி

மாலை 04.00: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்

ராஜஸ்தான் 199/199; காங்கிரஸ்-102, பாஜக-72, மற்றவை-25

மத்தியப்பிரதேசம் 230/230; காங்கிரஸ்-115, பாஜக-105, பிஎஸ்பி-04, மற்றவை-06

சத்தீஸ்கர் 90/90; காங்கிரஸ்-68, பாஜக-12, ஜேசிசி-09, மற்றவை-01

மிசோரம் 40/40; எம்என்எஃப்-26, காங்கிரஸ்-05, பாஜக-01, மற்றவை-08

தெலங்கானா 119/119; டிஆர்எஸ் கூட்டணி-93, தெலுங்குதேசம்-காங்கிரஸ் கூட்டணி-23, பாஜக-01, மற்றவை-02

மதியம் 03.00: மிசோரமில் மகிழ்ச்சி கொண்டாட்டத்தில் மிசோ தேசிய முன்னணி கட்சியினர்; மொத்தமுள்ள 40 தொகுதிகளில் 26 இடங்களை பிடித்து ஆட்சியை கைப்பற்றியது மிசோ தேசிய முன்னணி

மதியம் 02.59: தெலங்கானா மாநிலத்தில் ஏற்பட்ட தோல்விக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் முறைகேடு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் புகார்; 119 தொகுதிகளைக் கொண்ட தெலங்கானாவில் ஆட்சி அமைக்க 60 இடங்கள் பெற்று இருந்தாலே போதுமான நிலையில், டிஆர்எஸ் கட்சி தற்போது தனிப் பெரும்பான்மை பலத்துடன் முன்னிலையில் உள்ளது. 

மதியம் 02.54: ராஜஸ்தான் மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி 33 தொகுதிகளிலும், பாஜக 26 தொகுதிகளிலும் வெற்றி

மதியம் 02.23: தெலங்கானாவில் டிஆர்எஸ் கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் கஜ்வேல் தொகுதியில் வெற்றி; காங்கிரஸ் கட்சியின் அசோக் கெலாட் ராஜஸ்தானின் சர்தார்பூர் தொகுதியில் வெற்றி; ராஜஸ்தானின் டோங்க் தொகுதியில் போட்டியிட்ட காங்கிரஸ் கட்சியின் சச்சின் பைலட் வெற்றி

மதியம் 02.05: மத்தியப்பிரதேசத்தில் ஆட்சி அமைக்க காங்கிரசுக்கு ஆதரவு அளிப்பதாக பகுஜன் சமாஜ்வாதி கட்சி அறிவிப்பு

மதியம் 01.45: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்

ராஜஸ்தான் 199/199; காங்கிரஸ்-98, பாஜக-78, மற்றவை-23

மத்தியப்பிரதேசம் 230/230; காங்கிரஸ்-109, பாஜக-110, பிஎஸ்பி-05, மற்றவை-06

சத்தீஸ்கர் 90/90; காங்கிரஸ்-60, பாஜக-23, ஜேசிசி-05, மற்றவை-02

மிசோரம் 40/40; எம்என்எஃப்-24, காங்கிரஸ்-06, பாஜக-01, மற்றவை-09

தெலங்கானா 119/119; டிஆர்எஸ் கூட்டணி-85, தெலுங்குதேசம்-காங்கிரஸ் கூட்டணி-23, பாஜக-03, மற்றவை-08

மதியம் 01.40: மிசோரமில் ஆட்சியை கைப்பற்றியது எம்என்எஃப்; ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், 22 தொகுதிகளில் வெற்றி

மதியம் 01.35: பெரும்பான்மை பலத்துடன் நாங்கள் வெற்றி பெறுவோம்; இறுதி எண்ணிக்கை வந்த பின்னர் அது தெளிவாகும் என நான் நம்புகிறேன். எனினும், பாஜக-வுக்கு எதிரான கட்சிகள், ஒத்த சிதனையுடைய கட்சிகள் எங்களை ஆதரிப்பதை நாங்கள் வரவேற்கிறோம். அவர்களுடன் நாங்கள் தொடர்ந்து தொடர்பில் இருக்கிறோம்: சச்சின் பைலட்-ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்

மதியம் 01.30: மத்தியப்பிரதேசத்தில் பாஜக காங்கிரஸ் இடையே தொடர்ந்து இழுபறி; காங்கிரஸ்- 109, பாஜக- 108, பிஎஸ்பி- 4, மற்றவை- 6

மதியம் 01.20: தெலங்கானாவில் ஆளும் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி இரண்டு பங்கு பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும் அளவுக்கு வெற்றி பெரும் சூழல்

மதியம் 01.15: சத்தீஸ்கரில் காங்கிரஸ் கட்சியினர் கொண்டாட்டம்

மதியம் 01.00: மிசோரம் முதல்வரும், காங்கிரஸ் மூத்த தலைவருமான லால் தங்காவ்லா தான் போட்டியிட்ட சாம்பாய் தெற்கு தொகுதியில் தோல்வி

நண்பகல் 12.30: மிசோரமில் எம்என்எஃப் கட்சி 20 இடங்களில் வெற்றி; ஆட்சி அமைக்க 21 இடங்கள் தேவை என்ற நிலையில், அக்கட்சி தொடர்ந்து முன்னிலை

நண்பகல் 12.00: பாஜகவிற்கு எதிராக மக்கள் வாக்களித்துள்ளனர். இது மக்களின் தீர்ப்பு. இந்த நாட்டின் மக்களுக்கு கிடைத்த வெற்றி-மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜி

காலை 11.45: 5 மாநில தேர்தல்களில் காங்கிரஸ் கட்சிக்கு மக்கள் மகத்தான ஆதரவை தந்துள்ளனர் – தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர்

காலை 11.40: மத்திய பிரதேசத்தில் பாஜக மீண்டும் முன்னிலை; பாஜக 112 தொகுதிகளிலும், காங்கிரஸ் 108 தொகுதிகளிலும் முன்னிலை

காலை 11.30: காங்கிரஸ் தலைவராக கடந்த ஆண்டு இதே தினத்தில் தான் ராகுல் பதவியேற்றார். தேர்தல் முடிவுகள் அவருக்கு நாங்கள் அளிக்கும் பரிசு. மூன்று மாநிலங்களில் காங்கிரஸ் அரசமைக்கும்-சச்சின் பைலட்-ராஜஸ்தான் மாநில காங்கிரஸ் தலைவர்

காலை 11.20: மிசோரமில் எம்என்எஃப் கட்சி 8 தொகுதிகளில் வெற்றி; தெலங்கானாவில் டிஆர்எஸ் ஒரு தொகுதியில் வெற்றி

காலை 11.15: ராஜஸ்தான் முதல்வர் வேட்பாளர் யார் என்பது குறித்து தலைவர் ராகுல் முடிவெடுப்பார்: அசோக் கெலாட்

காலை 11.00: மிசோரமில் மிசோ தேசிய முன்னணி கட்சி பெரும்பான்மையான தொகுதிகளில் முன்னிலை வகித்து வரும் நிலையில், அக்கட்சி அலுவலகத்தில் இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்

காலை 10.30: ஐந்து மாநில தேர்தல் முடிவுகள் நிலவரம்

ராஜஸ்தான் 195/199; காங்கிரஸ்-101, பாஜக-78, மற்றவை-16

மத்தியப்பிரதேசம் 217/230; காங்கிரஸ்-105, பாஜக-101, பிஎஸ்பி-05, மற்றவை-06

சத்தீஸ்கர் 88/90; காங்கிரஸ்-52, பாஜக-27, ஜேசிசி-08, மற்றவை-01

மிசோரம் 40/40; எம்என்எஃப்-25 காங்கிரஸ்-10, பாஜக-01, மற்றவை-04

தெலங்கானா 119/119; டிஆர்எஸ் கூட்டணி-82, தெலுங்குதேசம்-காங்கிரஸ் கூட்டணி-25, பாஜக-06, மற்றவை-06

காலை 10.07: ராஜஸ்தானின் வசுந்தரா ராஜே 4055 வாக்குகள், அசோக் கெலாட் 5112 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை

காலை 10.00: சத்தீஸ்கர் முதல்வர் ரமண் சிங் பின்னடைவு

காலை 09.45: ஐந்து மாநில தேர்தல் சட்டப்பேரவைத் தேர்தல்; பெரும்பாலான தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலை

மத்திய பிரதேசம்: காங்கிரஸ்- 67, பாஜக- 58

ராஜஸ்தான்: காங்கிரஸ்- 82, பாஜக- 71

சத்தீஸ்கர்: காங்கிரஸ்- 41, பாஜக- 27, பிஎஸ்பி- 4

தெலங்கானா: தெலங்கானா ராஷ்டிர சமிதி- 83, காங்கிரஸ்- 22, பாஜக- 5

மிசோரம்: எம்என்எப்-14, காங்கிரஸ் -6, பாஜக- 1

காலை 09:30: டெல்லி காங்கிரஸ் கட்சி தலைமையகத்தில் பட்டாசுகள் குவிப்பு

crackers

காலை 09.23: ராஜஸ்தானில் காங்கிரஸ் முன்னிலை; சச்சின் பைலட் இல்லம் முன்பு தொண்டர்கள் கொண்டாட்டம்

காலை 09.05: தெலங்கானா முன்னிலை நிலவரம்; டிஆர்எஸ் 29, காங்கிரஸ் 30, பாஜக 3, தெலுங்கு தேசம் கட்சி 3 தொகுதிகளில் முன்னிலை

காலை 09.00: மிசோரம் மாநில வாக்கு எண்ணிக்கை நிலவரம்; மிசோ தேசிய முன்னணி 4, காங்கிரஸ் 2 தொகுதியில் முன்னிலை

காலை 08.43: ராஜஸ்தானில் காங்கிரஸ் – 8; பாரதிய ஜனதா – 4 இடங்களில் முன்னிலை; தெலங்கானாவில் டிஆர்எஸ் 5 தொகுதிகளில் முன்னிலை

காலை 08.40: காங்கிரஸ் தலைவர் ராகுல் வீட்டிற்கு வெளியே அக்கட்சி தொண்டர்கள் யாகம் வளர்த்து வழிபாடு

congresspray

 

காலை 08.34: ராஜஸ்தானில் பாஜக 2, காங்கிரஸ் 4 தொகுதிகளில் முன்னிலை

காலை 08.20: மத்தியப்பிரதேசத்தில் பாஜக நான்கு தொகுதிகளை முன்னிலை

காலை 08.15: சத்தீஸ்கரில் பாஜக, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் தலா ஒரு இடங்களில் முன்னிலை

காலை 08.00: ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தலில் பதிவான வாக்குகளின் எண்ணிக்கை தொடங்கியது. முதல்கட்டமாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டு வருகின்றன.