5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு !

 

5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு அவர்களது பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு !

இந்த கல்வியாண்டு இறுதியில் 8 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காகப் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை கட்டாயம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது.

தமிழகத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் மட்டுமே பொதுத் தேர்வுகள் எழுதி வந்த நிலையில், 11 ஆம் வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது. அதன் படி, கடந்த 2 ஆண்டுகளாக 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வு நடத்தப்பட்டு வருகிறது. இதனையடுத்து, கட்டாய தேர்ச்சி முறை சட்டத்திருத்தத்தின் படி, 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கும் பொதுத் தேர்வு நடத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது.

ttn

அதன் படி, இந்த கல்வியாண்டு இறுதியில் 8 மற்றும் 5 ஆம் வகுப்பு மாணவர்களுக்குத் தேர்வு நடத்தப்படும் என்றும், அதற்காகப் பிறப்பு சான்றிதழ், சாதி சான்றிதழ் ஆகியவை கட்டாயம் என்றும் பள்ளிக் கல்வித்துறை அறிவித்தது. 5 மற்றும் 8 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படுமா என்று பல்வேறு கேள்விகள் எழுந்து வந்த நிலையில், மாணவர்களின் விவரங்களை எமிஸ் எனப்படும் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு தளத்தில் பதிவேற்ற வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை அறிவித்ததால் பொதுத் தேர்வு நடத்தப்படுவது உறுதியானது. 

ttn

இந்நிலையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன், 5 மற்றும் 8 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் அவர்களது பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுதலாம் என்றும் அதற்கான மொத்த அறிவிப்புகளும் இன்று மாலை வெளியாகும் என்றும் தெரிவித்தார்