5 நாள் வேலை வார முறையை கைவிட்ட சிக்கிம் அரசு – ஊழியர்கள் செயல்பாட்டில் திருப்தி இல்லை

 

5 நாள் வேலை வார முறையை கைவிட்ட சிக்கிம் அரசு – ஊழியர்கள் செயல்பாட்டில் திருப்தி இல்லை

வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்று அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகையை சிக்கிம் அரசு மாற்றியமைத்துள்ளது.

கேங்டாக்: வாரத்திற்கு 5 நாட்கள் மட்டுமே வேலை என்று அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சலுகையை சிக்கிம் அரசு மாற்றியமைத்துள்ளது.

ஊழியர்களின் செயல்பாட்டில் திருப்தி ஏற்படாததால் ஐந்து நாள் வேலை வார முறையை சிக்கிம் அரசு வாபஸ் பெற்றுள்ளது. மேலும் அரசு மற்றும் பொதுத்துறை ஊழியர்களுக்கு இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் மட்டுமே விடுமுறை கிடைக்கும் என்று அறிவித்துள்ளது. இந்த புதிய முறை ஏப்ரல் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ttn

கடந்த ஆண்டு மே மாதம் ஆட்சிக்கு வந்த பின்னர், முதல்வர் பிரேம் சிங் தமாங், மாநில அரசு மற்றும் பொதுத்துறை பிரிவுகளின் ஊழியர்களுக்காக ஐந்து நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்தினார். முன்னதாக, இது ஆறு நாள் வாரமாக இருந்தது.

ஆனால் தனது ஊழியர்களுக்கு சனிக்கிழமைகளில் விடுமுறை அளித்த போதிலும் அவர்களின் செயல்பாட்டில் சிக்கிம் அரசுக்கு திருப்தி ஏற்படவில்லை. இதனால் கடந்த மே28, 2019 அறிவிப்பை மாற்றியமைத்த தலைமைச் செயலாளர் எஸ்.சி.குப்தா, ஏப்ரல்1, 2020 முதல் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகள் மட்டுமே அரசு மற்றும் பொதுத்துறை நிறுவன அலுவலகங்களுக்கு விடுமுறையாக இருக்கும் என்று கூறினார்.