5 நாளிலேயே மோசமான சாதனையைச் செய்த பிகில்!

 

5 நாளிலேயே மோசமான சாதனையைச் செய்த பிகில்!

பிகில், ரிலீசான ஒரே வாரத்தில் தள்ளாடுவதைப் பார்த்து பெரிய பட்ஜெட்களில் படமெடுத்து வருபவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.

தமிழகம் முழுவதும் பலத்த கொண்டாட்டங்களுடன் தீபாவளியன்று வெளியான ‘பிகில்’ திரைப்படம் கடந்த ஒரு வாரத்தில் ரூ.200 கோடியை வசூல் செய்து சாதனை படைத்தது என்று எல்லோரும் பேசி வந்த நிலையில், அடுத்த நாளே வெளியான அனைத்து திரையரங்குகளிலும் பல் இளிக்க ஆரம்பித்தது.

Bigil

நேற்றைய நிலவரப்படி சென்னையில் தேவி பாரடைஸ் தியேட்டரில் மதியம் 3 மணி காட்சிக்கு வெறும் 4 டிக்கெட்டுகளே பிகில் படத்துக்காக விற்பனை ஆன நிலையில், ஷோ துவங்கும் நிமிடம் வரையிலும் வேறு யாருமே படம் பார்க்க வராததால் அதிரடியாக படத்தின் காட்சியை ரத்து செய்வதாக அறிவித்தது தேவிபாரடைஸ். நாலு பேர் மட்டும் உட்கார்ந்து படம் பார்க்க தியேட்டர் ஊழியர்களே பத்து பதினைஞ்சு பேர் வேலப் பார்க்கணும்’ என்று புலம்பிக் கொண்டே ரத்து செய்வதாக அறிவித்ததாகவும் கூறினார்கள். இனி பிற திரையரங்குகளிலும் குறைகுறைந்தபட்சம் ஒரு ஷோவிற்கு 20 பேர் அளவிலாவது வந்தால் மட்டுமே ஷோ ஓட்டப்படும் என்றும் தியேட்டர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

Devi paradise

பெரிய நடிகர்களின் படங்களுக்கு ரிலீஸான 7ம் நாளே இது போன்ற நிலை எப்போதுமே வந்தது கிடையாது என்று சினிமா வட்டாரங்களில் அதிர்ச்சியடைந்து பேசிக் கொண்டார்கள். இந்நிலையில், ரசிகர்கள் எதிர்பார்ப்பது கோடிகளைக் கொட்டி தயாரிக்கப்படும் படங்களைக் கிடையாது. நல்ல கதையம்சம் உள்ள படங்களைத் தான் என்பதை மீண்டும் நிரூபிக்கும் வகையில், பிகில் படத்தைக் கேன்சல் செய்த தேவி பாரடைஸில் இன்று முதல் ‘கைதி’ படம் வெளியிடப்படும் என்று அறிவித்துள்ளது. பிகில், ரிலீசான ஒரே வாரத்தில் தள்ளாடுவதைப் பார்த்து பெரிய பட்ஜெட்களில் படமெடுத்து வருபவர்கள் கலக்கத்தில் உள்ளார்கள்.