5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்

 

5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள்

5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள் வெளியாகியுள்ளது.

டெல்லி: 5 கேமராக்கள் கொண்ட எல்.ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் இந்திய வெளியீட்டு தேதி, விலை விபரங்கள் வெளியாகியுள்ளது.

தென்கொரிய நிறுவனமான எல்.ஜி தனது புதிய ஸ்மார்ட்போனான எல்.ஜி வி40 தின்க்யூ மாடலை கடந்த ஆண்டு அக்டோபர் மாதத்தில் சர்வதேச மார்க்கெட்டில் அறிமுகம் செய்தது. எல்ஜி வி30-யின் வெற்றியை தொடர்ந்து இந்த மாடல் வெளியிடப்பட்டது. இதில் முன்பக்கம் 2 கேமராவும், பின்பக்கம் 3 கேமராவும் என மொத்தம் 5 கேமராக்கள் இடம்பெற்றிருந்தது. இந்த ஸ்மார்ட்போன் வருகிற 24-ஆம் தேதி அமேசான் இணையதளத்தில் பிரத்யேகமாக விற்பனைக்கு வெளியாகிறது. மேலும் பூம்பாக்ஸ் ஸ்பீக்கர்கள், 32-பிட் ஹைஃபை குவாட்-டியேசி ஆடியோ மற்றும் டிடிஎஸ்:எக்ஸ் 3டி சரவுண்ட் சவுண்ட் ஆடியோ ஆகியவற்றை கொண்டுள்ளது.

எல்ஜி வி40 தின்க்யூ ஸ்மார்ட்போன் விலை ரூ.60,000-இல் இருந்து தொடங்குகிறது. மோரக்கான் ப்ளு, பிளாட்டினம் கிரே உள்ளிட்ட நிறங்களில் கிடைக்கிறது. ஆனால், அமேசான் தளத்தில் இந்த ஸ்மார்ட்போன் ரூ.49,990 சலுகை விலையில் கிடைக்கிறது.

மேலும், இந்த ஸ்மார்ட்போனில் 6.4 இன்ச் ஃபுல் விஷன் OLED டிஸ்பிளே, ஸ்னாப்டிராகன் 845 பிராசசர், 6 ஜிபி ரேம், 64 ஜிபி மற்றும் 128 ஜிபி மெமரி, ஆண்ட்ராய்டு 8.1 ஓரியோ இயங்குதளம், 12 எம்.பி + 16 எம்.பி + 12 எம்.பி மூன்று கேமராக்கள், டூயல் எல்.இ.டி. ஃபிளாஷ், 8 எம்.பி + 5 எம்.பி இரட்டை செல்ஃபி கேமரா, விரல்ரேகை சென்சார், வாட்டர் மற்றும் டஸ்ட் ரெசிஸ்டண்ட், 3.5 எம்.எம். ஆடியோ ஜாக், 4ஜி வோல்ட்இ, வைஃபை, ப்ளூடூத், யு.எஸ்.பி. டைப்-சி, 3300 எம்.ஏ.ஹெச் பேட்டரி, குவால்காம் குவிக் சார்ஜ் 3.0, வயர்லெஸ் சார்ஜிங் ஆகிய சிறப்பம்சங்கள் இடம்பெற்றுள்ளது.