5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

 

5 கி.மீ. வேகத்தில் நகரும் கஜா புயல்: வானிலை ஆய்வு மையம்

கஜா புயல் 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

சென்னை: கஜா புயல் 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தென்கிழக்கு வங்கக் கடல் பகுதியில் நிலை கொண்டிருந்த வலுவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது புயலாக வலுப்பெற்றுள்ளது. இப்புயலுக்கு கஜா என்ற பெயர் சூட்டப்பட்டுள்ளது. கஜா புயல் காரணமாக அதிகனமழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும், கஜா புயல் கடலூர் – பாம்பன் இடையே வருகிற 15-ம் தேதி கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது காற்று அதிகளவில் வீசும். கஜா புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாற வாய்ப்புள்ளது என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

இந்நிலையில், சென்னைக்கு கிழக்கே 750 கி.மீ. தூரத்திலும், நாகைக்கு வடகிழக்கே 840 கி.மீ. தொலைவிலும் கஜா புயல் மையம் கொண்டுள்ளது. தற்போது 5 கி.மீ. வேகத்தில் புயல் நகர்கிறது என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் நகர்ந்த புயல், காலை நிலவரப்படி மணிக்கு 5 கி.மீ. வேகத்தில் நகர்கிறது என தெரிவித்துள்ள இந்திய வானிலை மையம், புயலின் வேகம் மேலும் குறைந்தால் கரையைக் கடக்க தாமதமாகும் எனவும் தெரிவித்துள்ளது.