5 ஆவது நாளாக நீடிக்கும் கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் போராட்டம்… அரசுடன் இன்று பேச்சுவார்த்தை!

 

5 ஆவது நாளாக நீடிக்கும் கேன் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் போராட்டம்… அரசுடன் இன்று பேச்சுவார்த்தை!

குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 

குடிநீர் உரிமம் பெறாத 132 சுத்திகரிப்பு நிலையங்களை மூட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு பிறப்பித்ததால், கடலூர் அருகே 13 குடிநீர் சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் ,  குன்றத்தூரில்  4 குடிநீர்  சுத்திகரிப்பு நிலையங்களுக்கும் அதிகாரிகள் சீல் வைத்தனர். அதனை தொடர்ந்து பல நிலையங்களுக்குச் சீல் வைக்கப்பட்டு வருகிறது. இதனை எதிர்த்தும் குடிநீருக்காக நிலத்தடி நீர் எடுக்கும் உரிமத்தை வழங்கும் முறையை எளிதாக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தும் குடிநீர் சுத்திகரிப்பாளர்கள் கடந்த 28 ஆம் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு  வருகின்றனர். 

ttn

அவர்கள்  2014 ஆம் ஆண்டே உரிமம் கிடைக்க வழிவகை செய்ய வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டதாகவும் அதனை அரசு அமல்படுத்தவில்லை என்றும் குற்றம் சாட்டுகின்றனர். இந்த பிரச்சனைக்கு ஒரு தீர்வு கிட்ட அரசு பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும் இதனால் 10 லட்சம் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும் தெரிவித்தனர். 

ttn

சென்னை மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் கேன் குடிநீரையே மக்கள் நம்பியிருக்கும் நிலையில், சுத்திகரிப்பளார்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் கேன் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக, அம்மா குடிநீரிலும் ஸ்மார்ட் அட்டை இருப்பவர்களுக்கு மட்டுமே குடிநீர் வழங்கப்பட்டு வருவதால் மக்கள் பெரும் அவதிக்குள்ளாகியுள்ளனர். இந்நிலையில், இந்த போராட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைப்பதற்காக கேன் உற்பத்தியாளர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப்பணித்துறை செயலாளர் இன்று பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.