5ஜி சேவைக்கு தயாராகும் ஜியோ; ஏலம் விட்ட 6 மாதத்தில் சேவை

 

5ஜி சேவைக்கு தயாராகும் ஜியோ; ஏலம் விட்ட 6 மாதத்தில் சேவை

தொலைத்தொடர்பு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ, 5ஜி சேவையில் களம் இறங்கி தனது அடுத்த புரட்சியை தொடங்குவதிலும் முனைப்புக் காட்டி வருகிறது

டெல்லி: தொலைத்தொடர்பு சந்தையில் புரட்சியை ஏற்படுத்திய ரிலையன்ஸ் ஜியோ, 5ஜி சேவையில் களம் இறங்கி தனது அடுத்த புரட்சியை தொடங்குவதிலும் முனைப்புக் காட்டி வருகிறது.

தொலைத்தொடர்பு சந்தையில் ஜியோ வருகைக்கு முன், ஜியோ வருகைக்கு பின் என்று இரண்டாக பிரித்து கூறும் அளவிற்கு கடுமையான புரட்சிகளை அந்நிறுவனம் செய்து வருகிறது. 2016 செப்டம்பர் மாதம் ரிலையன்ஸ் ஜியோ தலைவர் முகேஷ் அம்பானி குறைந்த விலையில் ரிலையன்ஸ்  4ஜி சேவையை அறிமுகப்படுத்தி இணைய உலகில் புரட்சியை ஏற்படுத்தினார். 

தொலைத்தொடர்பு நிறுவனங்கள் 15 ஆண்டுகளுக்கு பின்பு 10 கோடி வாடிக்கையாளர்களை பெற்ற நிலையில், இரண்டே ஆண்டுகளில் 20 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களை தன் பக்கம் ஈர்த்துள்ளது ஜியோ.

இதனிடையே, 2020-ஆம் ஆண்டிற்குள் 5ஜி சேவையை நாடு முழுவதும் விரிவுபடுத்த வேண்டும் என்று மத்திய அரசு சமீபத்தில் அறிவித்திருந்தது. இதற்காக 22 பேர் கொண்ட குழு அமைத்து திட்டமிடப்பட்டும் வருகிறது. 2019 -ஆம் ஆண்டின் இறுதியில் 4ஜி சேவையைவிட 50 முதல் 60 மடங்கு வேகமான 5ஜி சேவைக்கான ஏலம் நடைபெறும் என்று சமீபத்தில் மத்திய அரசு தெரிவித்ததையடுத்து, 5ஜி சேவையில் களம் இறங்கி தனது அடுத்த புரட்சியை தொடங்குவதிலும் முனைப்புக் காட்டி வருகிறது ஜியோ.

ஏலம் அறிவிக்கப்பட்ட 6 மாதத்திற்குள் 5ஜி சேவையை நடைமுறைபடுத்தும் அளவுக்கு ஜியோவின் கட்டமைப்புகள் உள்ளது. எனவே, 2020-ஆம் ஆண்டின் மத்தியில் ஜியோ தனது சேவையை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.