17 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை!

 

17 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை!

ஜம்மு காஷ்மீர் முழுவதும் 4ஜி இணையதள வசதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்பட்டுள்ளது.

ஜம்மு- காஷ்மீர் மாநிலத்துக்கு வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த 2019 ஆம் ஆண்டு மத்திய அரசு ரத்து செய்தது. அதிலிருந்து ஜம்மு காஷ்மீரில் அதிவேக இன்டெர்நெட் 4ஜி இணைய சேவைக்கு தடை விதிக்கப்பட்டது. தொடர்ந்து கடந்த ஆண்டு ஆகஸ்ட் 17 ஆம் தேதி முதல் ஜம்மு, ரியாசி, சம்பா, கத்துவா மற்றும் உதம்பூர் ஆகிய  5 மாவட்டங்களில் 2ஜி இணைய சேவை வழங்கப்பட்டது. இருப்பினும் காஷ்மீரில் 4ஜி இணையதள சேவைகள் முடங்கியிருந்தன.

17 மாதங்களுக்குப் பிறகு ஜம்மு காஷ்மீரில் மீண்டும் 4ஜி சேவை!

இந்நிலையில் 05-08-2019 முதல் விதிக்கப்பட்டிருந்த தடை நீக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. ஜம்மு காஷ்மீர் முழுவதும் 17 மாதங்களுக்குப் பிறகு 4ஜி இணையதள சேவை வழங்கப்பட்டுள்ளது. கொரோனா மற்றும் பொதுமுடக்கத்தால் மாணவர்களின் கல்வி தடைபட்டிருக்கும் சூழலில், அவர்கள் ஆன்லைன் மூலம் படிக்க வசதியாக தற்போது 4ஜி சேவை மீண்டும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.