497 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர்… தடுமாறும் தென்னாபிரிக்கா.. மீண்டும் மழை!

 

497 ரன்களுக்கு இந்திய அணி டிக்ளேர்… தடுமாறும் தென்னாபிரிக்கா.. மீண்டும் மழை!

indian team

தென்னாபிரிக்க அணிக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்சில், இந்திய அணி 497 ரன்களுக்கு டிக்ளேர் செய்ததை அடுத்து, பேட்டிங் செய்த தென்ஆப்பிரிக்கா விக்கெட்டை இழந்து தடுமாறி வருகிறது.

இந்தியா-தென்னாப்பிரிக்கா அணிகள் மோதும் மூன்றாவது டெஸ்ட் போட்டி ராஞ்சி மைதானத்தில் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணிக்கு துவக்க வீரர் ரோஹித் சர்மா இரட்டை சதம் அடித்து டெஸ்ட் அரங்கில் மீண்டும் ஒரு வரலாற்று சாதனையை பதிவு செய்தார். இவருக்கு பக்கபலமாக இருந்த ரஹானே 115 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

The many moods of Captain @virat.kohli ?????? #TeamIndia #INDvSA @paytm

A post shared by Team India (@indiancricketteam) on

4-வது விக்கெட்டுக்கு ரோஹித் மற்றும் ரஹானே ஜோடி 267 ரன்கள் சேர்த்தது. அடுத்தடுத்து 3 விக்கெட்டுகளை இழந்த இந்திய அணிக்கு இந்த ஜோடி ரன் குவித்து சரிவிலிருந்து மீட்டு நல்ல ஸ்கோரை எட்ட உதவியது. இறுதியாக, முதல் இன்னிங்சில் 9 விக்கெட்டுகளை இழந்து 497 ரன்கள் எடுத்த இந்திய அணி டிக்ளேர் செய்தது. 

அடுத்ததாக களமிறங்கிய தென் ஆப்பிரிக்கா அணிக்கு துவக்க வீரர் டி காக் மற்றும் டீன் எல்கர் இருவரும் ஆட்டமிழக்க 9 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது.

முதல் நாளை போல இரண்டாம் நாளின் மூன்றாவது ஷெஷனில் மழையின் குறுக்கீட்டால் ஆட்டம் தடை பட்டது. 4.30 மணி வரை தொடர்ந்து மழை பெய்துகொண்டே இருந்ததால், இரண்டாம் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது.