இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களில் 48 % இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களே!

இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களில் 48 % இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களே!

உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டிப்போர். 2 கோடியே 94 லட்சத்து  45 ஆயிரத்து 688 பேர்.  3 கோடியை  விரைவாக நெருங்கி வருகிறது.

கொரோனா நோய்த் தொற்றிலிருந்து குணம் அடைந்து வீடு திரும்பியோர் 2 கோடியே 12 லட்சத்து 79 ஆயிரத்து 833 நபர்கள்.

இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களில் 48 % இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களே!
கொரோனா வைரஸ்

கொரோனா நோய்த் தொற்றால் சிகிச்சை பலன் அளிக்காது இறந்தவர்கள் 9 லட்சத்து 32 ஆயிரத்து 744 பேர்.  இறப்போர் சதவிகிதம் குறைந்துகொண்டே வந்தாலும் புதிய நோயாளிகளும் அதிகரித்து வருகிறார்கள்.   

கொரோனா பாதிப்பு நாடுகளின் பட்டியலில் பார்க்கும்போது  அமெரிக்காவில் 67,49,289 பேரும், இந்தியாவில் 4,930,236 பேரும், பிரேசில் நாட்டில்  4,349,544 பேரும் கொரோனவால்  பாதிக்கப்பட்டிருக்கின்றனர்.

உலகளவில் இந்தியா கொரோனா பாதிப்பில் இரண்டாம் இடத்தில் இருந்தாலும் குணமடைபவர்களின் எண்ணிக்கை அதிகமாகவும் இறப்பு விகிதம் குறைவாகவும் இருப்பது ஆறுதலான செய்தி.

இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களில் 48 % இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களே!

கொரோனா பாதிப்பிலிருந்து தினசரி குணமடைவோர் எண்ணிக்கை, நாட்டில் தொடர்ந்து அதிகரிக்கிறது.  குணமடைவோர் வீதம் இன்று 78.28%-ஐ கடந்தது. கடந்த 24 மணி நேரத்தில் 79,292 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

குணமடைந்தோர் மொத்த எண்ணிக்கை 38,59,399 ஆக உள்ளது. குணமடைந்தோர் மற்றும் சிகிச்சை பெறுபவர்களுக்கான இடைவெளி இன்று 28 லட்சத்தைக் கடந்தது.

இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களில் 48 % இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களே!

நாட்டில் சிகிச்சை பெறுபவர்களின் மொத்த எண்ணிக்கை 9,90,061-ஆக உள்ளது.

சிகிச்சை பெறுபவர்களில் 48.8%  பேர் மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் ஆந்திராவைச் சேர்ந்தவர்கள்.

இந்தியாவில் சிகிச்சை பெறுபவர்களில் 48 % இந்த மூன்று மாநிலங்களைச் சேர்ந்தவர்களே!

கடந்த 24 மணி நேரத்தில் 1,054 பேர் உயிரிழந்துள்ளனர். மொத்த இறப்பில் 69% பேர், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கர்நாடகா, ஆந்திரா மற்றும் தில்லியைச்  சேர்ந்தவர்கள்.