‘நம்ம சென்னை... நம்ம செஸ்...’ - இன்று தொடங்குகிறது செஸ் ஒலிம்பியாட்!

 
tn

சென்னையில் இன்று கோலாகலத்துடன் செஸ் ஒலிம்பியாட் போட்டி  தொடங்குகிறது.

இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடத்தப்பட்டு வரும் செஸ் ஒலிம்பியாட் போட்டியின்  44 வது ஆண்டு போட்டியானது சென்னையை அடுத்த மாமல்லபுரம் அருகே பூஞ்சேரி கிராமத்தில் உள்ள போர் பாயிண்ட்ஸ் நட்சத்திர ஓட்டலில் இன்று தொடங்குகிறது. ஆகஸ்ட் 10ஆம் தேதி வரை நடைபெறும் இந்த போட்டிக்கான விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.  சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் இன்று மாலை 6 மணிக்கு நடைபெறுகிறது.

chess

தமிழகத்தின் கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் பறைசாற்றும் விதமாக கண்கவர் நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெறும் இந்த விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டு  போட்டியை தொடங்கி வைக்கிறார்.

tn

பிரதமரின் பாதுகாப்பு வருகையை ஒட்டி இன்றும், நாளையும் சென்னையில் ஐந்து அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.  22 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.  அத்துடன் சென்னையில் ட்ரோன்கள் , ஹைட்ரஜன் பலூன்கள் போன்றவை பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.