மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா!

 

மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா!

மதுரை

மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள் உள்ளிட்ட 44 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

மதுரை மாவட்டத்தில் கொரோனா 2ஆம் அலை வேகமாக பரவி வருகிறது. இதனால் தினசரி பாதிப்பு ஆயிரத்தை நெருங்கி உள்ளது. குறிப்பாக நேற்று ஒரே நாளில் 996 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. நோய் தொற்றுக்கு உள்ளானவர்களுக்கு, மதுரை ராஜாஜி அரசு தலைமை மருத்துவமனையில் உள்ள கொரோனா சிறப்பு மையத்திலும், பல்வேறு தனியார் மருத்துவமனைகளிலும் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

மதுரை அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 44 பேருக்கு கொரோனா!

இதேபோல் மதுரை அரசு மருத்துவமனைகளில், விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், புதுக்கோட்டை உள்ளிட்ட அண்டை மாவட்டங்களில் இருந்தும் நோயாளிகளும் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில், மருத்துவமனையில் பணிபுரியும் செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உதவியாளர்கள் உள்பட 44 பேருக்கு இன்று வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

இதனையடுத்து, அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அரசு மருத்துவமனையில் பணிபுரியும் 44 பேருக்கு ஒரே நேரத்தில் வைரஸ் தொற்று ஏற்பட்டிருப்பது மதுரையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.