வாக்குச்சாவடி வாசலில் 4 பேர் சுட்டுக்கொலை: மேற்கு வங்க தேர்தலில் பதற்றம்

 

வாக்குச்சாவடி வாசலில் 4 பேர் சுட்டுக்கொலை: மேற்கு வங்க தேர்தலில் பதற்றம்

மேற்கு வங்க தேர்தலில் இன்று நான்காவது கட்ட தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று நடைபெற்று வரும் வாக்குப்பதிவில் பெரும் வன்முறை வெடித்திருக்கிறது. கூச்பிகர் மாவட்டத்தில் பாஜக – திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இடையே மோதல் வெடித்தது. இந்த மோதலில் வாக்குகுச்சாவடி வாசலிலேயே 4 பேர் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர். இதனால் அலறி அடித்து வாக்காளர்கள் சிதறி ஓடினர்.

வாக்குச்சாவடி வாசலில் 4 பேர் சுட்டுக்கொலை: மேற்கு வங்க தேர்தலில் பதற்றம்

மேற்கு வங்க தேர்தலில் நடந்த இந்த துப்பாக்கி சூடு சம்பவம் மாநிலம் முழுவதும் பெரும் பதற்றத்தினை ஏற்படுத்தி இருக்கிறது.

எட்டு கட்டமாக நடைபெறும் மேற்கு வங்க தேர்தலில் மூன்று கட்ட தேர்தல் வாக்குப்பதிவு முடிந்துள்ள நிலையில் இன்றூ காலை 7 மணியில் இருந்து நான்காவது கட்ட தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வந்தது. இதில் இரு கட்சியினருக்கு இடையே ஏற்பட்ட மோதலில் 4 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்த துப்பாக்கி சூட்டில் வாக்காளர் ஒருவரும் உயிரிழந்துள்ளார்.

பாஜக வேட்பாளர் லாக்கெட் சட்டர்ஜி என்பவரின் காரும் வன்முறையில் அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.

இந்த வன்முறை சம்பவம் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது.