420 லட்சத்திற்கு ஊழியர்களை அடமானம் வைத்து தலைமறைவான மெஸ் உரிமையாளர்! மதுரைக்காரங்கன்னா சும்மாவா?

420 லட்சத்திற்கு ஊழியர்களை அடமானம் வைத்து தலைமறைவான மெஸ் உரிமையாளர்! மதுரைக்காரங்கன்னா சும்மாவா?

எந்தவிதமான அலட்டலும் இல்லாமல், பெரிய நட்சத்திர பட்டாளங்கள் இல்லாமல் திரையரங்குகளில் சக்கைப் போடு போட்டு ஹிட்டடித்தது ‘சதுரங்க வேட்டை’  திரைப்படம்.  இன்னும் எத்தனைப் பாகங்கள் வேண்டுமானாலும் படமாக எடுக்கும் அளவிற்கு விநோதமான முறையில் அப்பாவி மக்களை ஏமாற்றி, கோடிகளில் காசு பார்த்து வருகிறார்கள் ஏமாற்று பேர்வழிகள். 

ramana mess

மதுரையில் பிரபலமான உணவங்களில் ஒன்றாக விளங்கிவந்த ரமணா மெஸ், திடீரென்று இழுத்து மூடப்பட்டது. மெஸ் மூடப்பட்டதன் காரணத்தைக் கேட்டால், இப்படியெல்லாமா செய்திருப்பாங்க? என்று வாய் பிளக்க வைக்கிறது செய்தி. அளவுக்கு அதிகமான பணம் சேர்ந்தவுடன் வருகிற பயம் ரமணா மெஸ்ஸின் உரிமையாளர் செந்திலுக்கும் வந்திருக்கிறது. அதன்பிறகு எதற்கெடுத்தாலும் ஜோதிடத்தை நம்பியே காரியங்களைச் செய்ய துவங்கியிருக்கிறார். ரெகுலராக சொல்லி வரும் ஜோதிடரும், அதிகளவில் மாடு வாங்கி வளர்த்தால், செல்வம் அதிகமாக சேரும் என்று ஆசை வார்த்தைச் சொல்லி, அவருக்கான காசை வாங்கிச் சென்றுள்ளார். இந்நிலையில், மூன்று கிளைகளைக் கொண்டு இயங்கி வந்த ரமணா மெஸ்ஸில் வேலைப் பார்த்து வரும் 120 ஊழியர்களையும் அழைத்து, ஒவ்வொருவரின் பெயரிலும் தலா 2 லட்சம் ரூபாய் என்று 420 லட்சம் ரூபாய் வங்கியில் கடனாக பெற்றிருக்கிறார். கடன் முழுவதுமே ஊழியர்களின் பெயரில் தான். உரிமையாளர் செந்திலின் பேரில் ஒத்த ரூபாய் கூட கடன் கிடையாது.

owner

420 லட்சம் ரூபாயோடு நிற்காமல், கோபால கிருஷ்ணன் என்பவரை, தனது மெஸ்ஸில் பங்குதாரராக சேர்த்துக் கொள்வதாக சொல்லி, 5 கோடி ரூபாய் வாங்கியிருக்கிறார். ஒரே நாளில், மூன்று கிளைகளிலும், செந்திலின் வீட்டிலும் பூட்டு தொங்குகிறது. ரூ.5 கோடியுடனும், வங்கிக் கடனில் பெற்ற தொகையுடனும் குடும்பத்தோடு தலைமறைவாகிவிட்டார். தான் கொடுத்த 5 கோடி ரூபாயுடன் தலைமறைவாகி விட்டதாக கோபாலகிருஷ்ணன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.  வங்கிகடனை திருப்பி செலுத்தாமல் முதலாளி தலைமறைவாகிவிட்டார் என்று தவிக்கிறார்கள் ஊழியர்கள்! பலே திருட்டை நினைத்து கடுப்பாகி, ஆளைத் தேடி வருகிறார்கள் காவல் துறையினர்!