42 வயதில் இரண்டாவது திருமணத்திற்குத் தயாரான அஜித் பட நாயகி!

 

42 வயதில் இரண்டாவது திருமணத்திற்குத் தயாரான அஜித் பட நாயகி!

நடிகை பூஜா பத்ரா தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

சென்னை: நடிகை பூஜா பத்ரா தனது இரண்டாவது திருமணத்திற்கு தயாராகியுள்ளதாகக் கூறப்படுகிறது. 

தமிழ், மலையாளம், ஹிந்தி உள்ளிட்ட மொழிகளில் நடித்துப் பிரபலமானவர் நடிகை பூஜா பத்ரா(42). ஹிந்தியில் ஏராளமான படங்களில் நடத்துத்திருக்கும் இவர் தமிழில் அஜித்தின் ‘கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் நடித்திருக்கிறார். 

பின்பு தமிழில் வாய்ப்பு கிடைக்காத காரணத்தினால் மீண்டும் பாலிவுட் பக்கமே சென்றுவிட்டார். பின்பு 2002ம் டாக்டர் Sonu S. Ahluwalia என்பவரைத்  திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் இடையே சில கருத்துவேறுபாடு ஏற்பட்டதால் கடந்த 2010ம் ஆண்டு இருவரும் பிரிந்து விட்டனர். 

nawab

விவாகரத்து பிறகு சினிமாவை விட்டு ஒதுங்கியிருந்த இவர் மீண்டும் பாலிவுட்டில் படங்களில் நடிக்க ஆரம்பித்தார். இந்த நிலையில் இவர் தற்போது தனது இரண்டாவது காதலனைக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆம்.. இவர் தற்போது நடிகர் நவாப் என்பவருடன் லிவிங் டுகெதர் முறையில் வாழ்ந்து வருவதாக சமீபத்தில் செய்திகள் வெளியானது. 

na

தற்போது அதை உறுதிப்படுத்தும் விதமாக நடிகர் நவாப் அவர்கள் இருவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் ‘உன்னை போன்று ஒரு பெண்ணை கண்டுபிடிக்க எனக்கு 46வருடங்கள் ஆனது’ என்று பதிவிட்டுள்ளார். இதன் மூலம் விரைவில் இவர்கள் தங்களது திருமண தேதியை அறிவிப்பார்கள் என்று பாலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டு வருகிறது. 

முன்னதாக நடிகர் நவாப் தமிழில் போஸ், கஜேந்திரன் யான் போன்ற படங்களில் நடித்துத்திருந்தது குறிப்பிடத்தக்கது.