ஒருவர் மூலமாக 400 பேருக்கு கொரோனா தொற்று பரவும்! அமைச்சர் எச்சரிக்கை!

 

ஒருவர் மூலமாக 400 பேருக்கு கொரோனா தொற்று பரவும்! அமைச்சர் எச்சரிக்கை!

கொரோனா இரண்டாவது அலையில் சிறுவர்களும் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றனர். பொதுவாக மனிதர்களை தாக்க கூடிய கொடிய வைரஸ் உடம்பில் வேகமாக வளர்வதற்கு சர்க்கரையின் அளவு அதிகமாக இருப்பதே காரணம் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர். உடலில் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் வைத்திருந்தால் வைரஸ் வேகமாக வளர்வதை தடுத்து விடலாம் என்கின்றனர் மருத்துவர்கள். மேலும் உடல் கொழுப்பு ,வயிற்றுக் கொழுப்பு, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கும் , சர்க்கரை நோயாளிகளுக்கும் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கிறது. அதனால் அவர்களை வைரஸ் எளிதில் தாக்குகிறது என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.

ஒருவர் மூலமாக 400 பேருக்கு கொரோனா தொற்று பரவும்! அமைச்சர் எச்சரிக்கை!

இது ஒருபுறமிருக்க ஆவி பிடிப்பதன் மூலம் கொரோனாவை ஒழிக்கலாம் என்று சொல்லப்பட்டு வருவதால், அனுபவ பூர்வமாக பலர் அது உண்மை என்றும் சொல்லி வருவதால் பொது இடத்திலும் நீராவி பிடித்தல் நிகழ்ச்சி ஆங்காங்கே நடைபெறுகிறது. கட்சியின் சார்பாகவும் பல்வேறு அமைப்புகளின் சார்பாகவும் நீராவி பிடித்தல் அமைக்கப்பட்டு பொதுமக்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருவர் மூலமாக 400 பேருக்கு கொரோனா தொற்று பரவும்! அமைச்சர் எச்சரிக்கை!

இந்நிலையில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், சென்னை லயோலா கல்லூரியில் கொரோனா மையத்தை தொடங்கி வைத்து பேசியபோது, கொரோனாவை தடுக்கும் பொருட்டு ஆவி பிடித்தல் நிகழ்ச்சியை பொது இடங்களில் நடத்த கூடாது என்று எச்சரித்தார். பொது இடங்களில் ஆவி புடிக்கிறோம் என்று கூறிக்கொண்டு புகையை உள் வாங்குவதாகவும் உடனடியாக அப்படிச் செய்பவர்களுக்கு நுரையீரல் பாதிப்பு வரக்கூடிய வாய்ப்புகள் இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறுவதாகவும் அவர் தெரிவித்தார்.

மேலும், கொரோனா தொற்று ஏற்பட்ட ஒருவர் மூலமாக 400 பேருக்கு தொற்று பரவுதல் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது என்று மருத்துவர்கள் கூறியிருப்பதையும் அவர் சொல்லி எச்சரித்தார். ஆகவே தமிழக அரசு சொல்லும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகளை தவறாது மக்கள் கடைபிடிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.