10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத் திட்டங்கள் குறைப்பு!

 

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத் திட்டங்கள் குறைப்பு!

கொரோனா அச்சுறுத்தலால் கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் இருந்து பள்ளிகள் மூடப்பட்டு இருக்கின்றன. பல மாதங்களாக பள்ளிகள் மூடப்பட்டிருப்பதால் பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களின் நிலையை கருத்தில் கொண்டு பள்ளிகளை திறக்க திட்டமிட்ட அரசு, பெற்றோர்களிடம் கருத்துக் கேட்பு நடத்தியது. அதில், பள்ளிகளை திறக்க பெற்றோர்கள் சம்மதம் தெரிவித்ததால், வரும் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட உள்ளது.

10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு 40% பாடத் திட்டங்கள் குறைப்பு!

இதனிடையே, ஆன்லைனிலேயே பாடங்கள் நடத்தப்படுவதால் முழு பாடத்திட்டத்தையும் நடத்த முடியவில்லை என ஆசிரியர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை கருத்தில் கொண்ட பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாடத்திட்டங்கள் குறைக்கப்படும் என அறிவித்திருந்தார். இந்த நிலையில், குறைக்கப்பட்ட பாடத்திட்டங்களின் விவரங்களை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது. மொத்தமாக 40% பாடங்கள் குறைக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது.

இது குறித்த முழு விவரங்கள், அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்பட உள்ளதாகவும் பள்ளிகள் திறந்தவுடன் மாணவர்களுக்கு அறிவிக்கப்பட உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், குறைக்கப்பட்ட பாடங்களின் அடிப்படையிலேயே மீதமுள்ள பாடங்கள் நடத்தப்படும் என்றும் கூறப்படுகிறது.