40 கோடி செலவில் பிரம்மாண்ட சண்டை காட்சி: மாஸ் காட்டும் இந்தியன் 2

 

40 கோடி செலவில் பிரம்மாண்ட சண்டை காட்சி: மாஸ் காட்டும் இந்தியன் 2

கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது

இந்தியன் 2 படத்தில் பிரம்மாண்ட  சண்டை காட்சிக்காக சுமார் 40 கோடி செலவிடப் போவதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 

இந்தியன் படத்தின் பிரமாண்ட வெற்றியைத் தொடர்ந்து மீண்டும் 22 வருடங்களுக்குப் பிறகு இந்தியன் 2 உருவாகி வருகிறது. ஷங்கர் இயக்கத்தில் மாபெரும் படைப்பாகத் தயாராகி வரும் இப்படத்தில் கமல் ஹாசன், காஜல் அகர்வால், ரகுல் ப்ரீத் சிங், பிரியா பவானி சங்கர், சித்தார்த், விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர்.   இந்த படத்தை  லைகா புரடக்‌ஷன் தயாரித்து வருகிறது. அனிருத் இந்தப் படத்துக்கு இசையமைக்கிறார்.

indian

இப்படத்தின் படப்பிடிப்பு ஈவிபி  பிலிம் சிட்டியில் பிரமாண்டமாக செட் அமைத்து விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. ஆனால் கமல் அரசியல்,  பிக் பாஸ் என்று தொடர்ச்சியாக பிஸியாகி விட்டதால் படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. தற்போது மீண்டும் இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ராஜமுந்திரி சிறைச்சாலை சென்னை திருவல்லிக்கேணி போன்ற இடங்களில் படப்பிடிப்பு  தொடர்ந்து நடந்து வருகிறது. 

இந்நிலையில் இந்தியன்2 படக்குழு படப்பிடிப்புக்காக போபால் செல்ல இருப்பதாகத் தெரிய வந்துள்ளது.  2 ஆயிரம் துணை நடிகர்களை வைத்து பிரம்மாண்டமான சண்டைக் காட்சியை  படமாக்கவுள்ளனர். இந்த சண்டை காட்சிக்கு  40 கோடி செலவிடப்போவதாகக் கூறப்படுகிறது.  இந்தியன் முதல் பக்கத்தின் கிளைமாக்ஸ் காட்சியில் கமல் ஹாசன் வெளிநாட்டிலிருந்து தொலைப்பேசியில் பேசும்படியாக காட்சி அமைக்கப்பட்டிருக்கும். அதனால் இந்தியன் 2 ஆரம்பத்தில் ப்ளாஷ்பேகில் வரும் கமல்ஹாசன் சம்பந்தப்பட்ட காட்சிகளைத் தைவான் மற்றும் யூரோப் நாடுகளில் எடுக்கவும் உள்ளனர். இதனால் படக்குழு வெளிநாட்டுக்குப் பறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.