‘சுடுதண்ணீர் கொட்டி 20 நாட்களாக சிகிச்சை’ 4 வயது சிறுமி உயிரிழப்பு!

 

‘சுடுதண்ணீர் கொட்டி 20 நாட்களாக சிகிச்சை’ 4 வயது சிறுமி உயிரிழப்பு!

கும்மிடிப்பூண்டி அருகே சுடு தண்ணீர் கொட்டி, சிகிச்சை பெற்று வந்த 4 வயது சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை புறநகர் பகுதியான கும்மிடிபூண்டியில் வசித்து வரும் மணிகண்டன் – மீனா தம்பதியின் மகள் ஷர்வினி(4). கடந்த ஆகஸ்ட் 29ம் தேதி, ஷர்வினியை குளிக்க வைக்க மீனா சுடு தண்ணீர் வைத்துள்ளார். அதனை எடுத்துக் கொண்டு வந்து, பாத்ரூம் அருகே ஒரு பக்கெட்டில் வைத்த மீனா வேறு வேலையை பார்க்க சென்றுள்ளார். அதற்குள்ளாக சுடு தண்ணீருக்கு அருகே வந்த ஷர்வினி அங்கே தவறி விழ, தண்ணீர் சிறுமியின் மீது ஊற்றிக் கொண்டுள்ளது.

‘சுடுதண்ணீர் கொட்டி 20 நாட்களாக சிகிச்சை’ 4 வயது சிறுமி உயிரிழப்பு!

இதனால் தரையில் விழுந்த ஷர்வினி அலறித் துடித்த சத்தம் கேட்டு வந்த, மீனா குழந்தை மீது சுடு தண்ணீர் கொட்டியதை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். இதனையடுத்து மீனாவும் மணிகண்டனும் சிறுமியை எழும்பூரில் உள்ள குழந்தைகள் நல மருத்துவனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் உடலில் ஆழமான காயங்கள் இருந்ததால் கிட்டத்தட்ட 20 நாட்களாக அம்மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் இன்று காலை சிகிச்சை பலன் இன்றி சிறுமி உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.