உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

 

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

உலகில் அதிகமான பொன்மொழிகளும் நம்பிக்கை மொழிகளும் ஒரு விஷயத்தை வலுப்படுத்தவே உருவாக்கப்பட்டன. அதுதான் தன்னம்பிக்கை. தம் மீது ஒருவருக்கு எழும் நம்பிக்கையைப் போல பெரிய பலம் வேறு எதுவுமில்லை.

இப்படிச் சொல்வதால், மற்றவரை நம்ப வேண்டாம் என்று பொருள் இல்லை. உங்கள் மீதான நம்பிக்கை இன்னும் இறுக்கமாக்கி கொள்ள வேண்டும் என்பதற்கே.

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

சரி, உங்கள் தன்னம்பிக்கை எந்தளவுக்கு உள்ளது என செக் பண்ணிப் பார்க்கலாமா?

கீழே கேட்கப்படும் கேள்விகளுக்கான பதில் வேறு யாருக்கும் நீங்கள் சொல்லப்போவதில்லை. உங்களுக்கே சொல்லிக் கொள்வது அதனால், நேர்மையாக, உண்மையான பதிலைச் சொல்லுங்கள்.

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

சமீபத்தில் உங்களுக்கு ஏதேனும் ஒரு வேலை கொடுக்கப்பட்டதா… அப்படிக் கொடுக்கப்பட்ட வேலைக்கு முதல் நபராக உங்களைத் தேர்ந்தெடுத்தார்களா… அல்லது வேறு யாருக்கேனும் கொடுக்கப்பட்ட அவர் மறுத்து அல்லது அவர் முடியாது என்று உங்களுக்குக் கொடுக்கப்பட்டதா?

முதல் நபராக உங்களுக்கு அளிக்கப்பட்டது எனில், வாழ்த்துகள். இரண்டாம், மூன்றாம் நபராக உங்களுக்கு அளிக்கப்பட்டிருந்தால் அந்த வேலையை ரொம்ப சிறப்பாக, கச்சிதமாக முடித்துகொடுங்கள். அடுத்த வேலையைச் செய்ய முதல் நபராக உங்களைத் தேர்ந்தெடுக்கும் விதமாகச் செய்துகொடுங்கள்.

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

சமீபத்தில் ஏதேனும் ஒரு முக்கிய முடிவு எடுத்தீர்களா… அல்லது உங்கள் வாழ்வின் மிக முக்கியமான முடிவு என்ன எதைக் கருதுகிறீர்கள்?

அந்த முடிவு முழுவதும் உங்களின் முழு யோசனையிலிருந்து எடுக்கப்பட்டதா… அல்லது வேறு நபரின் யோசனையால் முடிவெடுக்கப்பட்டதா… முழு யோசனையும் உங்களுடையது எனில் வாழ்த்துகள்..

மற்றவர் யோசனை 20-30 சதவிகிதத்திற்குள் இருந்தாலும் உங்களுக்கே அந்த கிரடிட் சொந்தம். அதற்கு மேலான சதவிகிதம் எனில், உங்கள் தன்னம்பிக்கையை வளர்த்துக்கொள்ள வேண்டியது அவசியம்.

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

சமீபத்தில் ஏதேனும் ஒரு வேலையை வேண்டாம் / முடியாது என்று தவிர்த்தீர்களா?

நிஜமாகவே உங்கள் கொள்கைக்கு அல்லது விருப்பத்துக்கு எதிரான வேலையை நீங்கள் தவிர்த்தீர்கள் என்றால் நல்ல விஷயமே. ஆனால், மொழி புரியாது, வேலை கஷ்டம் போன்ற காரணங்களால் தவிர்த்தால் நிச்சயம் உங்கள் தன்னம்பிக்கை மேலும் வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்.

அதற்கு எதனால் அந்த வேலையை வேண்டாம் எனச் சொன்னீர்களோ அந்தத் திறமையை வளர்த்துக்கொண்டாலே தன்னம்பிக்கை செழிக்கும்.

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

ஒரு வேலையைச் செய்ய நேரத் திட்டம் வகுத்துக்கொள்கிறீர்களா? திட்டமிட்டப்படியே முடிக்கிறீர்களா?

வகுத்துக்கொள்கிறேன் என்பது உங்கள் பதில் என்றால் சபாஷ் எனும் பாராட்டுகள் உங்களுக்கு. திட்டமிட்டப்படி முடித்தால் பாராட்டுகளோடு வாழ்த்துகளும், ஏனெனில் உங்கள் தன்னம்பிக்கை மிகச் சிறப்பாக இருக்கிறது.

ஒருவேளை திட்டப்படி நேரத்திற்குள் முடிக்க முடியவில்லை எனில், சற்று உங்கள் திறனை மேம்படுத்திக்கொள்ள வேண்டியது அவசியம்.

நேர்த்திட்டம் எல்லாம் வகுப்பதில்லை என்றால், ’வெரி ஸாரி’ தன்னம்பிக்கை லெவலில் ரொம்பவும் கீழே இருக்கிறீர்கள். கடும் உழைப்பு தேவை உங்களை மேம்படுத்திக்கொள்ள.

உங்கள் தன்னம்பிக்கையை செக் பண்ண 4 வழிகள்!

இந்த அளவுகோல்கள் எல்லாம் எல்லோருக்கும் ஒத்து வர வேண்டும் என்பது இல்லை. ஆனால், பெரும்பாலானவை இப்படிச் செக் பண்ணிப் பார்ப்பதில் தவறில்லை.

எப்போதும் உங்களை எதிர்மறை சிந்தனைகள் நெருங்கிவிடாது பார்த்துக்கொள்ளுங்கள். அதுவே உங்களின் தன்னம்பிக்கையை பன்மடங்கு வளர்க்கச் செய்து விடும்.

கூடவே பாசிட்டிவ் சிந்தனைகளும் பாசிட்டிவ் மனிதர்களையும் உங்கள் அருகில் வைத்துக்கொள்ளுங்கள். அதை விட தன்னம்பிக்கை வளர சிறந்த வழியே இல்லை.