இருப்பிட சான்றிதழ் மோசடி? 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து!

 

இருப்பிட சான்றிதழ் மோசடி? 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து!

இருப்பிடச் சான்றிதழ்களில் சந்தேகம் ஏற்பட்டதால் 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு அனுமதி ரத்து செய்யப்பட்டுள்ளது.

எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகளுக்கான கலந்தாய்வு கடந்த 18 ஆம் தேதி முதல் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்று வரும் இந்த கலந்தாய்வில் முதல் மூன்று நாட்கள் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5% இடஒதுக்கீடு அடிப்படையில் கலந்தாய்வு நடந்தது. அதன்பின் கடந்த 21 ஆம் தேதி முதல் சிறப்பு பிரிவினருக்கான மருத்துவ கலந்தாய்வில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரர்களின் வாரிசுகள் என கலந்து கொண்டனர். அதன்பின் நிவர் புயலால் ஒத்திவைக்கப்பட்ட மருத்துவ படிப்புகளுக்கான பொது கலந்தாய்வு நேற்று முதல் மீண்டும் தொடங்கியது.

இருப்பிட சான்றிதழ் மோசடி? 4 மாணவர்களின் மருத்துவ கலந்தாய்வு ரத்து!

இந்நிலையில் இன்று 4 மாணவர்களின் இருப்பிட சான்றிதழில் சந்தேகம் ஏற்பட்டதால் கலந்தாய்வில் பங்கேற்க அனுமதி ரத்து செய்யப்பட்டது. இந்த 4பேரின் இருப்பிட சான்றிதழ்களை சிறப்பு குழுவினர் ஆராய்ந்து இவர்களின் அனுமதி ரத்து செய்தனர். மேலும் சம்பந்தப்பட்டவர்கள் மீது விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும் போலி இருப்பிட சான்றிதழ்களை சமர்பித்திருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.