பொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட 4 மாவட்டங்களின் கீழமை நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி

 

பொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட 4 மாவட்டங்களின் கீழமை நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி

தமிழகத்தில் கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வரும் நிலையில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் தான் அதிக அளவு பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அதனால் அந்த 4 மாவட்டங்களிலும் வரும் 30 ஆம் தேதி வரை பொதுமுடக்கத்தை நீடிக்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதனால் அந்த 4 மாவட்டங்களின் கீழமை நீதிமன்ற நீதிபதிகள் வரும் 30 ஆம் தேதி வரை வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

பொதுமுடக்கம் நீடிக்கப்பட்ட 4 மாவட்டங்களின் கீழமை நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி

இது குறித்து உயர் நீதிமன்ற தலைமைப் பதிவாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை, காஞ்சிபுரம், செங் கல்பட்டு, திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களின் சிறப்பு நீதிமன்ற நீதிபதிகள் தவிர மற்ற கீழமை நீதிமன்ற நீதிபதிகள் வீட்டில் இருந்தே பணிபுரிய அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாகவும் நீதிமன்றங்களில் ஊழியர்களை குறைபாடு தொடர்பாக 4 மாவட்ட முதன்மை அமர்வு நீதிபதிகள் முடிவெடுத்துக் கொள்ளலாம் என்றும் நீதிமன்றங்கள் செயல்பட்டு வரும் தருமபுரி, நீலகிரி, கிருஷ் ணகிரி, திருவாரூர், தேனி, ராமநாத புரம், நாகப்பட்டினம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இப்போது இருக்கும் நடைமுறையிலேயே நீதிமன்றங்கள் தொடர்ந்து இயங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.