டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு.. குடிமகன்கள் அப்செட்!

 

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு.. குடிமகன்கள் அப்செட்!

தமிழக சட்டமன்றத் தேர்தல் வரும் ஏப்ரல் 6ம் தேதி நடைபெறவிருக்கிறது. தேர்தலுக்கான அனைத்து பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது. கொரோனா காலகட்டத்தில் தேர்தல் நடைபெறுவதால் கூடுதல் கவனம் செலுத்தி தேர்தல் ஆணையம், அனைத்து பணிகளையும் கவனித்து வருகிறது. அதுமட்டுமில்லாமல் அரசியல் ரீதியாகவும் முக்கியமான தேர்தல் என்பதால் தேர்தல் நேர பதற்றத்தை தணிக்கும் பொருட்டு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு.. குடிமகன்கள் அப்செட்!

பதற்றமான வாக்குச்சாவடிகள் கண்டறியும் பணி முடிவடைந்து, அந்த பகுதிகளில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இதனிடையே, பாதுகாப்பு பணிக்காக பறக்கும் படை வரவழைக்கப்பட்டது. அவர்கள் தேர்தல் நடத்தை விதிகளை தீவிரமாக கண்காணித்துக் கொண்டிருக்கிறார்கள். பாதுகாப்பு பணிக்காக 235 கம்பெனி துணை ராணுவப் படையினர் விரைவில் தமிழகம் வரவிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் லீவு.. குடிமகன்கள் அப்செட்!

இந்த நிலையில், தேர்தலை முன்னிட்டு ஏப்ரல் 4ஆம் தேதி முதல் 6ம் தேதி வரை டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ள மே 2ம் தேதி அன்றும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறையாம். அமைதியான முறையில் தேர்தல் நடைபெறுவதை உறுதி செய்யும் வகையில் டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தி மது பிரியர்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.