கேரளாவுக்கு கடத்தமுயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

 

கேரளாவுக்கு கடத்தமுயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

தேனி

கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு லாரியில் கடத்த முயன்ற 4.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்த போலீசார், இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர்.

தேனி மாவட்டம் கம்பம் பகுதியில் இருந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் கம்பம் தெற்கு காவல் நிலைய போலீசார் கூடலூர் சாலையில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர்.

கேரளாவுக்கு கடத்தமுயன்ற 4.5 டன் ரேஷன் அரிசி பறிமுதல்!

அப்போது, அந்த வழியாக கேரளா நோக்கி சென்ற லாரியை மறித்து சோதனையிட்ட போது, அதில் மூட்டை மூட்டையாக ரேஷன் அரிசி கடத்திச்சென்றது தெரியவந்தது. இதனை அடுத்து, லாரியில் இருந்த சுமார் 4.5 டன் ரேஷன் அரிசியை பறிமுதல் செய்தனர்.

மேலும், இதுதொடர்பாக கம்பம் பகுதியை சேர்ந்த சுரேந்திரன் மற்றும் ராயப்பன்பட்டியை சேர்ந்த விவேக் ஆகியோரை கைதுசெய்தனர். தொடர்ந்து, பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசியை வாகனத்துடன் உணவு பொருள் வழங்கல் துறையினரிடம் ஒப்படைக்க பட்டது.