“4 நாள்; சுமார் 4000 கி்மீ பயணம்” இறந்தவர் உடலை நெல்லைக்கு கொண்டுவந்த மாவட்ட நிர்வாகம்! நெல்லை துணை ஆணையர் சரவணன் பெருமிதம்!

 

“4 நாள்; சுமார் 4000 கி்மீ பயணம்” இறந்தவர் உடலை  நெல்லைக்கு கொண்டுவந்த மாவட்ட நிர்வாகம்! நெல்லை துணை ஆணையர் சரவணன் பெருமிதம்!

இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

தமிழகத்தில் கொரோனா தொற்றை தடுக்கும் நோக்கில் வரும் 3 ஆம் தேதி வரை ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கபட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்கள் வாங்கும் அங்காடிகள் உள்ளிட்டவை குறிப்பிட்ட கட்டுப்பாட்டுடன் காலை 6 மணி முதல் மதியம் 1 மணிவரை மட்டுமே திறந்துவைக்கப்பட்டுள்ளது. இதை தவிர்த்து மற்ற நேரங்களில் வெளியில் சுற்றி திரிபவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து வருகின்றனர். 

tt

இதனிடையே திருநெல்வேலியை சேர்ந்த ஒருவர்  சூரத்தில் தொழில் செய்து வர  உடல்நிலை குறைவால் அவர் இறந்ததாக தெரிகிறது.  கணவரது உடலை திருநெல்வேலி கொண்டு வந்தே ஆக வேண்டும் என்று அவரது மனைவி  வேண்டுகோள் விடுத்தார். இருப்பினும் ஊரடங்கால் இறந்தவர் உடலை சொந்த ஊர் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டது.  இதையடுத்து  திருநெல்வேலி போலீசார் சூரத் மாவட்ட நிர்வாகத்தின் உதவியை பெற்று மாவட்ட ஆட்சியரின் உத்தரவிற்கு இணங்க  அவரது உடல் கடுமையான சிரமத்திற்கு நடுவில் திருநெல்வேலிக்கு  கொண்டுவரப்பட்டது. 

இந்நிலையில் இதுகுறித்து நெல்லை துணை ஆணையர் சரவணன் தனது டிவிட்டர் பக்கத்தில், “போக வர 4 நாள் , சுமார் 4000 கி்மீ பயணம் , கொரோனா பயத்தால் உடலைக் கொண்டுவர  யாரும் முன்வராத சமயத்தில் இதனை சாத்தியமாக்கியது மாவட்ட நிர்வாகத்தின் சாதனையே. குடிமக்களின் தேவைக்காக அரசு நிர்வாகம் எவ்வளவு உழைக்கும் என்பதற்கு இது சரியான உதாரணம். நன்றி”என்று பதிவிட்டுள்ளார்.