4 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: செந்தில் பாலாஜிக்கு அடித்த ஜாக்பாட்!

 

4 தொகுதிகளின் திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு: செந்தில் பாலாஜிக்கு அடித்த ஜாக்பாட்!

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

சென்னை:  திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான வேட்பாளர்கள் பட்டியலை திமுக தலைமை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

இடைத்தேர்தல்

sarvanan

திருப்பரங்குன்றம், ஒட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, சூலுார் ஆகிய, நான்கு சட்டசபை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல், அடுத்த மாதம், 19ம் தேதி நடைபெற உள்ளது. அதன்படி அந்த நான்கு தொகுதிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள வேட்பாளர் பட்டியலில் திருப்பரங்குன்றம் தொகுதியில், ஏற்கனவே நடந்த இடைத்தேர்தலில், தி.மு.க., மருத்துவ அணியின், மாநில துணைத் தலைவர், டாக்டர் சரவணன், 70 ஆயிரம் ஓட்டுகள் பெற்றிருந்தார். மறைந்த, அ.தி.மு.க – எம்.எல்.ஏ, ஏ.கே.போஸுக்கு, இரட்டை இலை சின்னம் ஒதுக்கக் கோரும் படிவத்தில், ஜெயலலிதா கைரேகை சந்தேகத்துக்குரியது என, உயர் நீதிமன்றத்தில், டாக்டர் சரவணன் வழக்கு தொடர்ந்து இருந்தார். அதில், அவர் வெற்றி பெற்றுள்ளார். எனவே, அவருக்கு, மீண்டும் திருப்பரங்குன்றம் தொகுதியில் போட்டியிட வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.

அரவக்குறிச்சியில் செந்தில் பாலாஜி

senthil balaji

அரவக்குறிச்சியில், திமுக வேட்பாளர், கே.சி.பழனிசாமியை எதிர்த்து, அதிமுக வேட்பாளர், செந்தில் பாலாஜி வெற்றி பெற்றார். ஜெயலலிதா மறைவுக்கு பின், தினகரனின் ஆதரவாளராக செயல்பட்டதால், அவரது, எம்.எல்.ஏ., பதவி பறிக்கப்பட்டது. அ.ம.மு.க., மாவட்ட செயலராக பணியாற்றிய, செந்தில் பாலாஜி, தற்போது, திமுகவில் இணைந்து விட்டார். எனவே, அவருக்கு மீண்டும் அரவக்குறிச்சியில் போட்டியிட, திமுக வாய்ப்பு கொடுத்துள்ளது. 

சூலுார் தொகுதியில் பொங்கலூர் பழனிசாமி

pongalur

சூலுார் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், திமுக., கூட்டணியில், காங்கிரஸ் போட்டியிட்டது. காங்கிரஸ் வேட்பாளர், மனோகரன், மறைந்த, எம்.எல்.ஏ., கனகராஜிடம், 36 ஆயிரம் ஓட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். இம்முறை திமுகவை முன்னாள் அமைச்சர் பொங்கலூர் பழனிசாமிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

ஒட்டப்பிடாரம் சண்முகையா

sanmugaiah

ஒட்டப்பிடாரம் தொகுதியில், கடந்த பொதுத் தேர்தலில், திமுக கூட்டணியில் இடம் பெற்றிருந்த, புதிய தமிழகம் கட்சி தலைவர், டாக்டர் கிருஷ்ணசாமி போட்டியிட்டார். தற்போது, அதிமுக கூட்டணியில் தென்காசி மக்களவை தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலையில் சண்முகையா திமுக வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.

இதையும் வாசிக்க: ஸ்ரீதேவி மகள் லவ் யூ சொன்ன ஹீரோ இவர்தான்?!..