4வது முறையாக கர்நாடகாவின் முதல்வராகிறார் எடியூரப்பா?!

 

4வது முறையாக கர்நாடகாவின் முதல்வராகிறார் எடியூரப்பா?!

 நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

கர்நாடகா: எடியூரப்பா விரைவில் கர்நாடக முதல்வராகப் பதவியேற்பார் என்று பாஜக வட்டாரங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன. 

kumarasamy

கர்நாடக சட்டப் பேரவையில் குமாரசாமி அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசுக்கு ஆதரவாக 99 எம்.எல்.ஏக்களும், எடியூரப்பாவுக்கு ஆதரவாக  105 எம்.எல்.ஏக்களும் வாக்களித்தனர். இதனால்  நம்பிக்கை வாக்கெடுப்பில் குமாரசாமி அரசு தோல்வியைத் தழுவியதால் குமாரசாமி முதல்வர் பதவியிலிருந்து விலகினார்.

bjp

இதனால் கர்நாடகாவில், காங்கிரஸ் – மதச்சார்பற்ற ஜனதா தள கூட்டணி முடிவுக்கு வந்ததையடுத்து பாஜக எம்எல்ஏ-க்கள்  நேற்றிரவு பெங்களூருவில் உள்ள ரமதா ஹோட்டலில் ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்தினர். இதில் கர்நாடக அரசியலில் அடுத்தக்கட்ட  நகர்வு குறித்து ஆலோசிக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. மேலும் அங்கு பாஜக எம்எல்ஏ-க்கள் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாடினர். 

yediyurappa

இந்நிலையில் கர்நாடகாவின் புதிய முதல்வராக எடியூரப்பா தான் என்று  பாஜக வட்டாரங்களில் பேசப்படுகிறது. இது தொடர்பாக டெல்லியில் பாஜக  தேசியத் தலைவர் அமித் ஷா, மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தினார். இதில் கலந்து கொண்ட கர்நாடகாவைச் சேர்ந்த நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் பிரகலாத் ஜோஷி,   எடியூரப்பா தான் கர்நாடகாவின் முதல்வர் என்பது பாஜகவின் தேர்வாக இருந்தாலும்,  இதுபற்றி இறுதியான முடிவை கட்சி மேலிடம் தான் உறுதி செய்யும்  என்று  தெரிவித்துள்ளார்.இதன் மூலம் எடியூரப்பா விரைவில் கர்நாடக முதல்வராகப் பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.