4வது டி20: ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து! இந்தியா முதலில் பேட்டிங்!

 

4வது டி20: ஆறுதல் வெற்றி பெறுமா நியூசிலாந்து! இந்தியா முதலில் பேட்டிங்!

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய பெரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

4வது டி20 போட்டியில் பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது நியூசிலாந்து அணி.

இந்தியா நியூசிலாந்து அணிகள் மோதிய பெரும் 5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில், முதல் மூன்று போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டது.

இந்நிலையில், வெலிங்டன் மைதானத்தில் இன்று நடைபெற இருக்கும் நான்காவது டி20 போட்டியில் முதலில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் இம்முறை முதலில் பந்துவீச முடிவு செய்திருக்கிறார்.

4th T20

இந்திய அணி ஏற்கனவே தொடரை கைப்பற்றி விட்டதால் மீதமிருக்கும் இரண்டு போட்டிகள் பெயரளவிலேயே நடைபெறவிருக்கிறது. சொந்த மைதானத்தில் அடுத்தடுத்து மூன்று போட்டிகளை தோல்வியை தழுவிய நியூசிலாந்து அணி, நான்காவது போட்டியிலாவது ஆறுதல் வெற்றியை பெற வேண்டும் என ரசிகர்கள் பெரும் எதிர்பார்ப்பில் இருக்கின்றனர்.

அதேநேரம் இந்திய அணி நியூசிலாந்தை ஒயிட்வாஷ் செய்யும் முனைப்பில் மீதமிருக்கும் இரண்டு போட்டிகளை எதிர் கொள்ளும் எனவும் கணிக்கப்படுகிறது. 

இன்றைய போட்டியில் இந்திய அணியில் மூன்று பெரிய மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கிறது. ரோகித் சர்மா, முகமது சமி மற்றும் ஜடேஜா ஆகிய மூவருக்கும் ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களுக்கு பதிலாக சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர் மற்றும் நவ்தீப் சைனி ஆகிய மூவரும் அணியில் எடுத்து வரப்பட்டு இருக்கின்றனர்.

4th T20

ரோகித் சர்மாவிற்கு பதிலாக சஞ்சு சாம்சன் இன்றைய போட்டியின் துவக்க வீரராக களம் இறங்குவார் என விராட் கோலி தெரிவித்திருக்கிறார்.

இந்திய அணி வீரர்கள் பட்டியல்:

சஞ்சு சாம்சன், லோகேஷ் ராகுல் (கீப்பர்), விராட் கோலி (கேப்டன்), ஸ்ரேயாஸ் ஐயர், மனிஷ் பாண்டே, சிவம் துபெ, வாஷிங்டன் சுந்தர், ஷார்துல் தாக்கூர், யுஸ்வேந்திர சாஹல், ஜஸ்பிரீத் பும்ரா, நவ்தீப் சைனி.

நியூசிலாந்து அணி:

மார்ட்டின் கப்டில், கொலின் முன்ரோ, டாம் புரூஸ், ராஸ் டெய்லர், டிம் செயிஃபெர்ட் (கீப்பர்), டேரில் மிட்செல், மிட்செல் சான்டனர், ஸ்காட் குக்களின், டிம் சவுத்தி (கேப்டன்), இஸ் சோதி, ஹமிஷ் பென்னட்.