ஏன்? எதற்கு? எப்படி?: ஈபிஎஸ்சை பார்த்து ஓபிஎஸ் கேட்ட 3 கேள்விகள்

 

ஏன்? எதற்கு? எப்படி?: ஈபிஎஸ்சை பார்த்து ஓபிஎஸ் கேட்ட 3 கேள்விகள்

கொங்கு மண்டலத்தை தவிர மற்ற மண்டலங்களில் எல்லாம் திமுக வெற்றி வாகை சூடியது. அதிலும் டெல்டா மாவட்டத்தில் இரண்டு தொகுதியைத் தவிர மற்ற அனைத்தையும் வாரிச் சுருட்டியது. எல்லா மண்டலங்களிலும் இப்படி திமுக பெருவாரியாக வெற்றி பெற்ரும் கொங்கு மண்டலத்தில் மட்டும் ஏன் வெற்றி பெற முடியவில்லை என்ற கேள்வி எழுந்த போது, எடப்பாடி பழனிச்சாமி ஏரியா என்பதால்தான் என்று கருதப்பட்டது .

ஏன்? எதற்கு? எப்படி?: ஈபிஎஸ்சை பார்த்து ஓபிஎஸ் கேட்ட 3 கேள்விகள்

ஒட்டுமொத்த தமிழ்நாட்டுக்கும் முதல்வர் என்றாலும் கொங்கு மண்டலத்தின் முன்னேற்றத்திற்காகத் தான் எடப்பாடி பழனிச்சாமி பெரிதும் பாடுபட்டார். பெரும்பாலான நாட்கள் அவர் கொங்கு மண்டலத்திலேயே இருந்து, அங்கேயே செயல்பட்டு வந்தார். தமிழ்நாட்டின் வளர்ச்சி என்பதை விட கொங்குவின் வளர்ச்சி என்பதையே கணக்கில் எடுத்துக்கொண்டார் எடப்பாடி பழனிச்சாமி. இதனால்தான் கொங்கு மண்டலத்தில் அதிமுக அதிகம் வெற்றி பெற்றிருக்கிறது என்ற பேச்சு எழுந்தது.

நேற்று நடந்த எதிர்க்கட்சித் தலைவர் யார் என்ற விவாதத்தின் போதும் இதே குற்றச்சாட்டை முன்வைத்திருக்கிறார் ஓ பன்னீர்செல்வம். என்னதான் 200 இடங்களில் வருவோம் என்று திமுக சொல்லி வந்தாலும், இந்த தேர்தலில் நாம் தான் நிச்சயமாக ஜெயித்து இருக்க வேண்டியது. ஆனால், கொங்கு மண்டலத்தில் மட்டும் வெற்றி பெற்று மற்ற மண்டலங்களில் தோல்வி பெற்றதற்கும் காரணம் என்ன?

ஏன்? எதற்கு? எப்படி?: ஈபிஎஸ்சை பார்த்து ஓபிஎஸ் கேட்ட 3 கேள்விகள்

பொதுவாக தமிழ்நாடு என்ற அளவில் கட்சியை கொண்டு போயிருந்தால் இந்த தேர்தலில் நிச்சயம் நமக்குத் தான் வெற்றி கிடைத்திருக்கும். ஆனால் ஒரு பகுதியை மட்டுமே முன்னேற்ற வேண்டும், ஒரு பகுதியில் இருப்பவர்கள் மட்டுமே முன்னேற வேண்டும் என்ற குறுகிய கண்ணோட்டத்தில் பார்த்தால், அந்த குறுகிய கண்ணோட்டத்தில் கட்சியை நகர்த்திக்கொண்டு சென்றதால் தான் நமக்கு இந்த தேர்தலில் தோல்வி ஏற்பட்டிருக்கிறது. இதிலிருந்தே இந்த தேர்தல் முடிவுகளுக்கு எல்லாம் காரணம் யார் என்று தெரியும். குறுகிய கண்ணோட்டத்தில் கட்சியை நகர்த்தியது ஏன்? என்று மறைமுகமாக எடப்பாடி பழனிச்சாமி குற்றஞ்சாட்டி இருக்கிறார் ஓ பன்னீர்செல்வம்.

ஏன்? எதற்கு? எப்படி?: ஈபிஎஸ்சை பார்த்து ஓபிஎஸ் கேட்ட 3 கேள்விகள்

அதுமட்டுமல்லாமல், தேமுதிகவை கடைசி நேரத்தில் கழட்டி விட வேண்டிய அவசியம் எதற்கு வந்தது? கட்சியின் ஒன்றுவிட்ட சகோதரர்களை மீண்டும் சேர்த்துக் கொள்ள எதிர்ப்பு தெரிவிக்க மனசு எப்படி வந்தது? இது எல்லாம் சேர்த்து தான் நம்மை இந்த தேர்தலில் தோற்கடித்துவிட்டது என்று எடப்பாடி பழனிச்சாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம்.